Sunday, March 23
Shadow

இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் பிறந்த தின பதிவு

கே. எஸ். ரவிகுமார் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் அவற்றின் வணிக ரீதியான வெற்றிக்காக அறியப்படுபவை. தான் இயக்கும் படங்களில் ஓரிரு காட்சிகளில் தோன்றி நடிப்பதையும் இவர் வழமையாக கொண்டிருக்கிறார். ரவிக்குமார், இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். இயக்குனர் சேரன், ரவிக்குமாரின் உதவி இயக்குனர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

கே எஸ் ரவிகுமார் காமெடி, நாடகம் மற்றும் த்ரில்லர் போன்ற எண்ணற்ற திரைப்படங்களை இயக்கியவர். அவரது படம் ( 2008 ) தசாவதாரம் முதல் நான்கு வாரங்களில் உலகம் முழுவதும் 16 மில்லியன் டாலர்கள் மொத்தமாக வருமானம் ஈட்டியது. மற்றும் இப்படம்  மிக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றானது.

இவர் இயக்கிய படங்கள் : மாயோன் , அயோக்யா, கோமாளி, என் ஆளோட செருப்பை காணோம், ரெமோ, றெக்க, முடிஞ்சா இவன புடி