Thursday, January 22
Shadow

இயக்குனர் மு.ராஜேஷ் பிறந்த தின பதிவு

மு. இராசேசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதையாசிரியர், தன்னுடைய முழு நீள நகைச்சுவைத் திரைப்படங்களுக்காக அறியப்பட்டவர். இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தி 2009ஆம் ஆண்டு வெளியானது, அதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு பாஸ் என்கிற பாஸ்கரன் வெளியானது. இவ்விரண்டு திரைப்படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து பெரிய இயக்குநராக உயர்ந்தார்.

இவருடைய முதல் திரைப்படமான சிவா மனசுல சக்தியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இவருடைய இரண்டாவது திரைப்படமான, பாஸ் என்கிற பாஸ்கரனில் முதல் திரைப்படத்தின் கதாநாயகனான ஜீவா (திரைப்படம்: சிவா மனசுல சக்தி), சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.இவருடைய மூன்றாவது திரைப்படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில், இரண்டாவது திரைப்படத்தின் கதாநாயகனான ஆர்யா (திரைப்படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்), மறுபடியும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இவருடைய அனைத்து திரைப்படங்களிலும், சந்தானம் நகைச்சுவைத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய படங்கள்: சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க