Monday, April 20
Shadow

திரில்லர் உலகிற்கு மீண்டும் இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன் – புதிய விசாரணை கதைக்கு பூஜையுடன் துவக்கம்!

திரில்லர் உலகிற்கு மீண்டும் இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன் – புதிய விசாரணை கதைக்கு பூஜையுடன் துவக்கம்!

‘இறுதிப்பக்கம்’ மூலம் தரமான மர்டர் மிஸ்டரி கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ. கண்ணதாசன், தற்போது புதிய இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்துடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார். Insomniac’s Dream Creations நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகும் இந்த புதிய படம், சமீபத்தில் நடைபெற்ற பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.

‘இறுதிப்பக்கம்’, ‘டியர் ரதி’ போன்ற கவனிக்கத்தக்க படங்களைத் தொடர்ந்து உருவாகும் இந்த திரைப்படம், வழக்கமான திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட கதை அமைப்பைக் கொண்டதாக இருக்கும் என படக்குழு தெரிவிக்கிறது. தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பேசப்படாத ஒரு புதிய கோணத்தில் விசாரணை திரில்லராக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படத்தில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மற்றும் ‘குமார சம்பவம்’ தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான குமரன் தங்கராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் ஸ்மேகா, ராஜேஷ் பாலசந்திரன் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களில் இணைகின்றனர். மேலும் அபிஷேக் ஜோசப் சத்யா உள்ளிட்ட பலரும் படத்தில் முக்கியமான வேடங்களில் தோன்ற உள்ளனர்.

கதை திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை மையமாகக் கொண்டு நகர்வதால், அந்த பகுதிகளிலேயே பெரும்பாலான படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. உண்மைச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் எதார்த்தமான லொக்கேஷன்களில் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

இந்த படத்திற்கு லோகேஷ் இளங்கோவன் ஒளிப்பதிவு செய்கிறார். ராம் பாண்டியன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்ள, ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைக்கிறார். மேலும் இதில் இணையும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Director Mano V. Kannadasan Returns with a New Investigation Thriller – Film Launched with a Grand Pooja!

After delivering a gripping murder mystery with Irudhipakkam, director Mano V. Kannadasan is all set to return to the thriller genre with his next project. The film, which marks the third production of Insomniac’s Dream Creations, was officially launched with a grand pooja ceremony.

Following notable films like Irudhipakkam and Dear Rathi, this new venture is said to present a different narrative approach compared to conventional thriller films. The makers reveal that the movie will be an investigation thriller set in a fresh and unexplored space in Tamil cinema, promising a completely new experience for audiences.

The film stars Kumaran Thangarajan, known for his performances in the popular television series Pandian Stores and Kumara Sambavam. He will be joined by Smega and Rajesh Balachandran in key roles. Actors including Abishek Joseph Sathya and several other prominent performers will also appear in important characters.

The story is set around the districts of Trichy and Perambalur, and most of the shooting is planned to take place in these locations to capture an authentic atmosphere.

The film’s cinematography will be handled by Lokesh Ilangovan, while Ram Pandian takes care of editing. Music for the film will be composed by Jones Rupert. The makers are expected to officially announce more details about the cast and technical crew soon.