Saturday, April 18
Shadow

இயக்குனர் விஜய் மற்றும் அமலாபால் மீண்டும் இணைய வாய்ப்பு

இயக்குனர் விஜய் கடந்த 2014-ம் ஆண்டு நடிகை அமலா பாலை திருமணம் செய்துகொண்டார். அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணங்களால் இரண்டே ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர்.

அமலாபால்விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.

ஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். யார் கண்தை பட்டதோ தெரியவில்லை பாவம் இருவரும்ட பிரிந்தார்கள். இந்த ஜோடியை பார்த்து எல்லோருக்கும் பொறாமை அதினாலே என்னவோ விரைவில் பிரிந்தனர். விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தற்போது வட சென்னை, திருட்டு பயலே 2, விஐபி 2 படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது விவாகரத்து முடிவு குறித்து பேசிய அவர், ” விஜய் மீது எனக்கு எப்போதும் கோபம் கிடையாது. இன்றைக்கும் அவர்தான் எனக்கு மிகவும் பிடித்த நபர். நான் 23 வயதில் திருமணம் செய்துகொண்டேன். அதுதான் நான் செய்த தவறு” என கூறியுள்ளார்.

அதே போல் விஜய்க்கும் அமலாபால் மீது உள்ள காதல் இன்னும் குறையவில்லை. இவர்கள் பிரிவுக்கு தன் பெற்றோர்கள்தான் முழு காரணம் என்பதை உறுதியாக நம்பும் விஜய், அவர்களுடன் பேசுவதையே தற்போது நிறுத்திக் கொண்டாராம். அவ்வளவு ஏன், இனி தன் பெயரை ஏ.எல்.விஜய் என யாரும் இன்ஷியலுடன் அச்சிடக்கூடாது எனவும் பத்திரிக்கையாளர்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் மூலம் இருவரும் ஒருவரை ஓருவர் இன்னும் காதலிப்பது உறுதியாக தெரியவருகிறது இருவரும் சந்தித்து பேசினால் மீண்டும் இருவரும் இணைய வாய்ப்புகள் அதிகம் அப்படி சேர்ந்தாலும் நல்லது தானே எல்லாம் அவன் செயல் .

Leave a Reply