
இயக்குனர் விஜய் படங்கள் என்றாலே நிச்சயம் குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாகவும் அதே சமயத்தில் சமுகத்தை மையமாகவும் கதைகள் இருக்கும் அதே நேரத்தில் தரமான படங்களாகாகவும் இருக்கும் அதே சமயத்தில் இவரின்படங்கள் வெற்றிபடங்கலாகவும் அமைந்துள்ளது இப்படி பட்ட தரமான இயக்குனர் விஜய்யின் அடுத்த படம் கரு என்று இருந்த இந்த படத்தின் பெயர் தற்போது தியா என்று மாற்றியுள்ளனர்.

`வனமகன்’ படத்துக்குப் பிறகு ஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் `கரு.’ தற்போது இந்தப் படத்தின் பெயர் `தியா’ என்று மாறியிருக்கிறது.
மலையாளத்தில் வெளியான `பிரேமம்’ படத்தின் மூலமாக தமிழகத்தில் ஃபேமஸ் ஆனவர் நடிகை சாய் பல்லவி. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள கரு படத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுதான். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இதற்கிடையில் இந்தப் படத்தின் பெயர் `கரு’ எனக்கு சொந்தமானது என்று ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் மணிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஏற்கெனவே இந்தப் படத்தின் பெயர் `கரு’வை 2013-ம் ஆண்டே தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்தேன். ஆனால், தற்போது லைகா நிறுவனம் இந்தப் பெயரை கொண்ட படத்தைத் தயாரித்து வருகிறது என்று அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
