Tuesday, April 21
Shadow

மீண்டும் தான் சிறந்த தலைவன் என்று நிருபித்த விஷால் வசூலை பொருத்தே நடிகர் சம்பளம்

விஷால் தன்னை நடிகர் மட்டும் இல்லை நான் தயாரிப்பாளரும் என்று மிருபித்துள்ளார் என்று தான் சொல்லனும் காரணம் சில் ஏன் குரிபிட்ட நபர்கள் நடிகர்கள் சம்பளம் குறைக்க வேண்டும் அப்ப தான் தயாரிப்பாளர்கள் சுமை குறையும் என்று தொடர்ந்து வலியுறுத்தினத் அதையும் என்னால் முடியும் என்று சாதித்து காட்டியுள்ளார்.

சினிமா ஸ்டிரைக்கிற்கு பிறகு பல அதிரடியான நடவடிக்கைகள் தமிழ் சினிமாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில் முக்கியமான ஒரு விஷயம் நடிகர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பானது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தினர் சென்னை அண்ணாசாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ஆலோசனை செய்தனர். தலைவர் நாசர், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் நடிகர்கள் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, ஆர்யா, கலையரசன், சுஹாசினி, கஸ்தூரி, நகுல், ஜிவி பிரகாஷ், பரத், கவுதம் கார்த்திக், கணேஷ் வெங்கட்ராம், கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில், படத்தயாரிப்பில் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை குறைப்பது மற்றும் நடிகர்கள் சம்பளம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, “திரைப்படத்தின் வருமானம், லாபத்தை வைத்து நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும்; ஊதிய நிர்ணயம் விரைவில் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அமல்படுத்தப்படும்” என்றார்.

நடிகர் சங்க தலைவர் நாசர் பேசும்போது, தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கும் விஷயங்களுக்கு நடிகர் சங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.