
“Dream Warrior Pictures” & “Potential Studios” – தமிழக அரசின் மாநில திரைப்பட விருதுகளுக்கு நன்றி தெரிவிப்பு.
தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை மதித்து ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள்’ வழங்கிய தமிழக முதலமைச்சர் M. K. Stalin அவர்களுக்கும், துணை முதலமைச்சர் Udhayanidhi Stalin அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் M. P. Saminathan அவர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
Dream Warrior Pictures மற்றும் Potential Studios நிறுவனங்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு மாநில விருதுகள் கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
விருது பெற்ற கலைஞர்கள்:
நடிகர்கள்:
Karthi, Vikram Prabhu, Arjun Das, Bose Venkat, Karunakaran, Guru Somasundaram
இயக்குநர்கள்:
H. Vinoth, Lokesh Kanagaraj, Raju Murugan, Arun Prabu Purushothaman
சண்டைப்பயிற்சி இயக்குநர்கள்:
Dhilip Subbarayan, Anbariv
பாடலாசிரியர்கள்:
Kapilan, Vivek
தயாரிப்பாளர்:
S. R. Prabhu

நடிகைகள்:
Aditi Balan, Madhumitha
பிற தொழில்நுட்ப கலைஞர்கள்:
Deepa Venkat (பின்னணி குரல்),
Pallavi Singh (ஆடை வடிவமைப்பு)
இவ்விருதுகள், கலைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் மட்டுமல்லாது, தரமான தமிழ்ச் சினிமாவை உருவாக்கும் எங்கள் முயற்சிக்கும் பெரும் ஊக்கமாகும்.
தமிழ்த் திரைப்படத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து தரமான படைப்புகளை வழங்குவோம் என்பதை இத்தருணத்தில் உறுதிப்படுத்துகிறோம்.
நன்றி,
எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு
எஸ்.ஆர்.பிரபு
(ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்)
எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு
எஸ்.ஆர்.பிரபு
பி.கோபிநாத்
ஆர்.தங்க பிரபாகரன்
(பொட்டென்சியல் ஸ்டுடியோஸ்)
