
கிஷோர் தென்னிந்தியத் திரைப்படத் தொகுப்பாளர். தமிழ், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் பணியாற்றியவர். ஆடுகளம் தமிழ்த் திரைப்படத்துக்காக இவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.
தன் 21 ஆம் வயதில் படத்தொகுப்பாளர்கள் பி. லெனின், வி. டி. விஜயனிடம் உதவியாளராகச் சேர்ந்தார். 70 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு இந்தித் திரைப்படங்களில் உதவிப் படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.
வெற்றிமாறனின் படத்தைத் தொகுத்துக்கொண்டிருக்கையில் மயங்கிவிழுந்த கிஷோரின் மருத்துவ ஆய்வில் மூளை உறைகட்டியிருப்பது கண்டறியப்பட்டது. அறுவை சிகிச்சை செய்தும் பலனின்றி 6 மார்ச் 2015 ல் உயிரிழந்தார்.

இவர் தொகுத்த திரைப்படங்கள்
ஈரம், ஆனந்தபுரத்து வீடு, ஆடுகளம், பயணம், ஆடு புலி, மாப்பிள்ளை, உதயன், காஞ்சனா, 180, எங்கேயும் எப்போதும், தோனி, ஆரோகணம், அம்மாவின் கைப்பேசி, பரதேசி, எதிர் நீச்சல், உதயம் என்.எச்4, மதயானைக் கூட்டம், வெற்றிச் செல்வன், நெடுஞ்சாலை, புலிவால், வானவராயன் வல்லவராயன், உன் சமையலறையில், காஞ்சனா 2, காக்கா முட்டை, விசாரணை
