
மின்சாரம் தாக்கும் நாயகி… திருமணத்திற்குப் பிறகு என்ன நடந்தது? – ‘ஓ..! சுகுமாரி’ ட்ரெய்லர் சிரிப்பும் சஸ்பென்ஸும் கலந்த விருந்து!
காதல், நகைச்சுவை, கிராமத்து மண்வாசனை, அதனுடன் யாரும் எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான திரைக்கதை… இப்படிப்பட்ட அம்சங்கள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் திரைப்படம் ‘ஓ..! சுகுமாரி’. ஏற்கனவே டீசர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள திரைப்படத்தின் ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தியுள்ளது.
மாஸ் கமர்ஷியல் படங்களின் வெற்றிக் கலைஞரான அனில் ரவிபுடி வெளியிட்டுள்ள இந்த ட்ரெய்லர், தொடக்கம் முதல் இறுதி வரை சிரிப்பையும் சுவாரஸ்யத்தையும் ஒன்றாக பரிமாறுகிறது.
தொட்டாலே ‘ஷாக்’… இதுதான் கதையின் திருப்புமுனை!
‘தாமினி’ என்ற இளம்பெண்ணை ஊரே அஞ்சுகிறது. காரணம், அவளை யார் தொட்டாலும் மின்சாரம் தாக்கியது போல அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த விசித்திரமான ரகசியத்தை மறைத்தே குடும்பத்தினர் அவளுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகுதான் நாயகனுக்கு அந்த உண்மை தெரிய வருகிறது.
அதன்பிறகு புதுமண தம்பதியரின் வாழ்க்கையில் நிகழும் குழப்பங்கள், கலகலப்பான சம்பவங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் அவர்கள் காதலை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதையே திரைப்படம் நகைச்சுவையுடன் சொல்லப் போகிறது என்பதை ட்ரெய்லர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது.
முதல் முறையாக இணையும் திரு வீர் – ஐஸ்வர்யா ராஜேஷ்
திரு வீரும், ஐஸ்வர்யா ராஜேஷும் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் இந்த திரைப்படத்தில் இருவரின் திரைவேதியலும் இயல்பான நடிப்பும் ட்ரெய்லரிலேயே கவனம் ஈர்க்கிறது. கிராமத்து இளைஞனாக திரு வீர் இயல்பாக பொருந்தியிருக்க, வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நடிப்பால் தனி முத்திரை பதிக்கிறார்.
முரளிதர் கௌட், விஷ்ணு ஒய் (MAD புகழ்), ஜான்சி, ஆமனி, ஆனந்த்கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் கதைக்கு வலுசேர்த்துள்ளனர்.
கிராமத்து அழகும், கலகலப்பான இசையும்
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன், புதுமையான கதையை குடும்பம் முழுவதும் ரசிக்கும் வகையில் நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் வடிவமைத்திருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சி.எச். குஷேந்தர் கிராமத்து இயற்கை அழகை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார். இசையமைப்பாளர் பரத் மஞ்சிராஜு உற்சாகமான பின்னணி இசையால் ட்ரெய்லரின் வேகத்தை மேலும் உயர்த்தியிருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை திருமலா எம். திருப்பதி, படத்தொகுப்பை ஸ்ரீ வரபிரசாத் கவனித்துள்ளனர்.
ஜூலை 17 முதல் உலகம் முழுவதும்
கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரித்துள்ள ‘ஓ..! சுகுமாரி’, காதல், நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் வித்தியாசமான கற்பனைக் கதைக்களம் ஆகியவற்றை இணைத்த முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக ஜூலை 17 முதல் உலகம் முழுவதும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

# Electric Shocks, Romance & Laughter: ‘Oh..! Sukumari’ Trailer Promises a Delightful Family Entertainer
After creating a strong buzz with its teaser and songs, Oh..! Sukumari has taken the excitement a notch higher with the release of its theatrical trailer. Unveiled by hit filmmaker Anil Ravipudi, the trailer introduces audiences to a quirky, fun-filled world that blends romance, comedy, and heartfelt emotions against a charming rural backdrop.
Marking the first on-screen collaboration between Thiru Veer and Aishwarya Rajesh, the film promises a refreshing entertainer built around an unusual yet engaging premise.
A Bride With a Shocking Secret
The trailer introduces Damini, a spirited young woman feared by everyone in her village for one bizarre reason—anyone who touches her experiences an electric shock. Determined to keep this mysterious condition a secret, her family arranges her marriage to the hero, who has no idea what awaits him after the wedding.
What follows is a series of hilarious, unexpected, and emotional situations as the newlyweds struggle to deal with this extraordinary problem. Their journey of overcoming the challenge together while discovering love, trust, and happiness forms the heart of the story.
A Fresh Pairing With Promising Performances
Director Bharat Dharshan presents the unconventional storyline with an entertaining balance of comedy and emotion. Thiru Veer delivers a lively performance as a carefree village youngster, while Aishwarya Rajesh shines in a unique role, bringing both charm and emotional depth to her character.
The supporting cast, including Muralidhar Goud, Vishnu Oi (MAD fame), Jhansi, Amani, and Anandhkota Jayaram, adds further strength to the film’s entertaining narrative.
Strong Technical Team
Cinematographer CH Kushendar beautifully captures the picturesque rural landscapes, enhancing the film’s visual appeal. Music composer Bharath Manchiraju complements the lively narrative with an energetic background score. Thirumala M. Thirupathi serves as the production designer, while Sree Varaprasad handles the editing, ensuring a crisp and engaging presentation.
Produced by Maheswara Reddy Mooli under the Gangaa Entertainments banner, Oh..! Sukumari is positioned as a wholesome family entertainer that blends romance, comedy, fantasy, and emotions into a refreshing cinematic experience.
Set for a worldwide theatrical release on July 17, the film will be released in Tamil and Telugu, promising audiences a fun-filled entertainer with a unique twist.
