Sunday, May 19
Shadow

இட்டர்னல்ஸ் + திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

இயக்குனர்  Chloé Zhao இயக்கத்தில்  நடிகர்கள்  ஜெம்மா சான், ரிச்சர்ட் மேடன், குமைல் நஞ்சியானி, லியா மெக்ஹக், பிரையன் டைரி ஹென்றி, லாரன் ரிட்லாஃப், பேரி கியோகன், டான் லீ, ஹரிஷ் படேல், கிட் ஹாரிங்டன், சல்மா ஹயக், ஏஞ்சலினா ஜோலி ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள எடர்னல்ஸ் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.
பல ஆயிரம் ஆண்டு முன்பு 10 சூப்பர் ஹீரோக்கள் என்று அழைக்கப்படும் இட்டர்னல்ஸ், டிவியண்ட்ஸ் என்ற தீய குணம் கொண்ட மிருகங்களை அழித்து மனித இனத்தைக் காப்பாற்றுவதற்காக அனுப்பப்படுகிறார்கள். அந்த 10 சூப்பர் ஹீரோக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அவர்களை கொல்லவும் முடியாது. வயதும் ஆகாது.
தனது சக்தியை பயன்படுத்தி உலகத்தில் உள்ள அனைத்து டிவியண்ட்ஸ்களையும் அழித்து விடுகிறார்கள். தற்போது இந்த காலத்தில் வாழ்ந்து வரும் அதிக சக்தி கொண்ட டிவியண்ட்ஸ் ஒன்று அதே 10 சூப்பர் ஹீரோக்களை ஒவ்வொருத்தராக அழிக்கிறது. அவர்களிடம் இருந்த சக்தியையும் எடுத்துக் கொள்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட டிவியண்ட்ஸ் மறுபடியும் எப்படி வந்தது? டிவியண்ட்ஸ்களை அழித்தார்களா? சூப்பர் கதாநாயகர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொண்டார்களா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
பென் டேவிஸ் ஒளிப்பதிவும் ராமின் டிஜவாடியின் பின்னணி இசையும் சிறப்பு. 2019 ஆம் ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்திற்கு பிறகு ஆரம்பிக்கும் புதிய கதை என்பதால் இந்த படத்தில் கதைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருக்கிறார் இயக்குனர் சோலி ஜாவோ.
படத்தின் பிளஸ்: படத்தின்  திரைக்கதை, விசுவல் எபக்ட்ஸ், பிரமாண்டம் நிறைந்த காட்சிகள்
படத்தின் மைன்ஸ்: படம் சற்று பொறுமையாகவே செல்கிறது,
மொத்தத்தில்,  பொழுது போக்கு நிறைந்த இட்டர்னல்ஸ்  கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்