
சுதந்திர தினத்தில் தியாகத்தை நினைவூட்டும் ‘ஃபௌஜி’ – பிரபாஸின் புதிய போஸ்டர் வெளியீடு
டிசம்பர் 3-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ஹனு ராகவபூடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட பான் இந்தியா திரைப்படம்
சுதந்திர தினம் என்றாலே கொண்டாட்டமும் தேசிய உணர்வும் நினைவுக்கு வரும். ஆனால், சுதந்திரம் கிடைப்பதற்கு பின்னால் இருந்த போராட்டத்தையும் தியாகத்தையும் நினைவுபடுத்தும் வகையில், வித்தியாசமான பார்வையுடன் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படக்குழு.
ஹனு ராகவபூடி இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம், பிரபாஸின் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி-சீரிஸ் வழங்கும் இப்படம், 2026 டிசம்பர் 3 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் டைட்டில் போஸ்டர், ப்ரீ-லுக் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட ஒவ்வொரு அப்டேட்டும் படத்தின் கதைக்களம் குறித்த ஆர்வத்தை அதிகரித்து வரும் நிலையில், தற்போது வெளியாகியுள்ள சுதந்திர தின சிறப்பு போஸ்டர் படத்தின் பின்னணியில் இருக்கும் வரலாற்று உணர்வை மேலும் வெளிப்படுத்துகிறது.
வழக்கமான சுதந்திர தின கொண்டாட்டக் காட்சிகளுக்கு மாறாக, போரால் சிதைந்த ஒரு நகரத்தின் பின்னணியில் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகை, தீப்பிழம்புகள், சேதமடைந்த கட்டிடங்கள் மற்றும் சிதறிக் கிடக்கும் பொருட்களுக்கு நடுவே தொலைவில் கம்பீரமாகத் தெரிகிறது சார்மினார்.
போஸ்டரில் பிரபாஸின் முகம் இடம்பெறவில்லை. ஆனால், அவரது தோற்றமே கதாபாத்திரத்தின் தீவிரத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. ரத்தமும் அழுக்கும் படிந்த உடையுடன், காயங்களுடன், காலில் செருப்பின்றி சிதைந்த தெருக்களில் நடந்து வரும் பிரபாஸ், இரு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்தியபடி காட்சியளிக்கிறார். அவருக்கு முன்னால் பாரம்பரிய இந்திய உடையில் ஒருவர் நீண்ட கைத்தடியுடன் நடந்து செல்வதும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சியின் மூலம் ஒரு வரலாற்று மோதலின் நடுவே சிக்கியிருக்கும் கதாபாத்திரத்தின் போராட்டத்தை உணர்த்துகிறது படக்குழு. அதைவிட முக்கியமாக, “சுதந்திரம் கொண்டாட்டமாக மாறுவதற்கு முன்பு, அது ஒரு போராக இருந்தது!” என்ற படக்குழுவின் வாசகம், சுதந்திர தின போஸ்டருக்கு அழுத்தமான அர்த்தத்தை வழங்குகிறது.
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்துக்காக போராடிய வீரர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் நினைவுகூரும் விதமாக, “நமது நாளைக்காகப் போராடிய ஒவ்வொரு ஃபௌஜியின் வீரத்திற்கும் தலைவணங்குகிறோம்” என்ற செய்தியையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ‘ஃபௌஜி’ என்ற தலைப்பே போராடிய வீரர்களுக்கான மரியாதையின் அடையாளமாக மாறுகிறது.
படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி நடிக்கிறார். மூத்த நடிகர்களான அனுபம் கேர், மிதுன் சக்ரவர்த்தி, ஜெயப்பிரதா மற்றும் பானு சந்தர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
ஹனு ராகவபூடி எழுதி இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி, ஒய். ரவி சங்கர் மற்றும் பூஷண் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை குல்ஷன் குமார், பூஷண் குமார் மற்றும் டி-சீரிஸ் வழங்குகின்றனர்.
ஒளிப்பதிவை சுதீப் சட்டர்ஜி ISC மேற்கொள்ள, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பையும், கோடகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். கிருஷ்ண காந்த் பாடல்களை எழுத, பிரேம் ரக்ஷித் நடன இயக்கத்தை மேற்கொள்கிறார். ஷீத்தல் இக்பால் ஷர்மா மற்றும் டி. விஜய் பாஸ்கர் ஆடை வடிவமைப்பை கவனிக்கின்றனர். ஆர்.சி. கமலா கண்ணன் VFX பணிகளை மேற்கொள்கிறார்.
நடிகர்கள்: பிரபாஸ், இமான்வி, மிதுன் சக்ரவர்த்தி, அனுபம் கேர், ஜெயப்பிரதா, பானு சந்தர் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் – ஹனு ராகவபூடி
தயாரிப்பு – மைத்ரி மூவி மேக்கர்ஸ்
வழங்குபவர்கள் – குல்ஷன் குமார், பூஷண் குமார் & டி-சீரிஸ்
தயாரிப்பாளர்கள் – நவீன் ஏர்னேனி, ஒய். ரவி சங்கர், பூஷண் குமார்
ஒளிப்பதிவு – சுதீப் சட்டர்ஜி ISC
இசை – விஷால் சந்திரசேகர்
தயாரிப்பு வடிவமைப்பு – அனில் விலாஸ் ஜாதவ்
படத்தொகுப்பு – கோடகிரி வெங்கடேஸ்வர ராவ்
பாடல்கள் – கிருஷ்ண காந்த்
நடன இயக்கம் – பிரேம் ரக்ஷித்
ஆடை வடிவமைப்பு – ஷீத்தல் இக்பால் ஷர்மா, டி. விஜய் பாஸ்கர்
VFX – ஆர்.சி. கமலா கண்ணன்
பப்ளிசிட்டி டிசைனர்கள் – அனில்-பானு
PRO – யுவராஜ்
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ

‘Fauzi’ New Poster Turns Independence Day Into a Powerful Tribute to Sacrifice
Prabhas’ highly anticipated pan-India period action drama arrives worldwide on December 3, 2026
Independence Day is usually associated with celebration and national pride. However, the makers of Prabhas’ highly anticipated pan-India film ‘Fauzi’ have chosen to mark the occasion with a poster that looks beyond the celebrations and pays tribute to the sacrifices and struggles behind India’s freedom.
Written and directed by creative filmmaker Hanu Raghavapudi, ‘Fauzi’ is one of the most awaited projects featuring Rebel Star Prabhas. Produced by Mythri Movie Makers and presented by T-Series, the film is slated for a worldwide theatrical release on December 3, 2026.
From the title poster and pre-look to the first look, every promotional update from the film has continued to build curiosity around its period setting and intriguing storyline. The newly released Independence Day poster takes that anticipation a step further by offering a glimpse into the intense and emotionally charged world of the film.
Unlike the festive imagery generally associated with Independence Day, the poster presents a city devastated by conflict. Smoke, flames, damaged buildings and scattered debris dominate the frame, while the iconic Charminar can be seen standing prominently in the distance.
Prabhas’ face is not revealed in the poster, but his appearance immediately conveys the intensity of his character. Covered in blood and dirt, and appearing badly battered, he walks barefoot through the destroyed streets while holding a short gun in each hand. Another character, dressed in traditional Indian attire, walks ahead carrying a long stick.
The striking visual appears to capture a character caught in the middle of a violent historical conflict. Giving the poster its emotional foundation is the makers’ powerful message:
“Before freedom became a celebration, it was a battle!”
The line serves as a reminder that the freedom enjoyed by the nation today came after years of struggle, courage and sacrifice.
The tribute is further strengthened by the words:
“Saluting the spirit of every Fauzi who fought for our tomorrow.”
With this message, the title ‘Fauzi’ takes on an even deeper meaning, becoming a tribute to the brave individuals who fought for a better future.
The film features Imanvi as the female lead opposite Prabhas. Veteran actors Anupam Kher, Mithun Chakraborty, Jaya Prada and Bhanu Chandar are also part of the prominent cast.
‘Fauzi’ is written and directed by Hanu Raghavapudi and produced by Mythri Movie Makers. Naveen Yerneni, Y. Ravi Shankar and Bhushan Kumar are producing the film, while Gulshan Kumar, Bhushan Kumar and T-Series are presenting it.
The technical team includes Sudeep Chatterjee ISC as cinematographer, Vishal Chandrasekhar as music composer, Anil Vilas Jadhav as production designer and Kotagiri Venkateswara Rao as editor. Krishna Kanth has penned the lyrics, while Prem Rakshit is the choreographer. Costume design is handled by Sheetal Iqbal Sharma and T. Vijay Bhaskar, with R.C. Kamalakannan overseeing the VFX.
Cast
Prabhas, Imanvi, Mithun Chakraborty, Anupam Kher, Jaya Prada, Bhanu Chandar and others.
Technical Crew
Writer & Director: Hanu Raghavapudi
Production House: Mythri Movie Makers
Presented By: Gulshan Kumar, Bhushan Kumar & T-Series
Producers: Naveen Yerneni, Y. Ravi Shankar & Bhushan Kumar
DOP: Sudeep Chatterjee ISC
Music: Vishal Chandrasekhar
Production Designer: Anil Vilas Jadhav
Editor: Kotagiri Venkateswara Rao
Lyrics: Krishna Kanth
Choreographer: Prem Rakshit
Costume Designers: Sheetal Iqbal Sharma, T. Vijay Bhaskar
VFX: R.C. Kamalakannan
Publicity Designers: Anil-Bhanu
PRO: Yuvraaj
Marketing: First Show
