
தமிழ் பொழுதுபோக்குக்கு புதிய அடையாளம் – Sony VIZHA
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதல் நிகழ்வுடன் அறிமுகம்; பிரீமியம் தமிழ் கதைகளுக்கு உலகளாவிய மேடை அமைக்க Sony Pictures Networks India திட்டம்
மும்பை, ஆகஸ்ட் 15, 2026:
தமிழ் மொழி, கலாச்சாரம், பாரம்பரியம், குடும்ப உறவுகள், கனவுகள் என தமிழர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய பொழுதுபோக்கு சேனலை Sony Pictures Networks India (SPNI) அறிமுகப்படுத்தியுள்ளது. ‘Sony VIZHA’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தமிழ் பொது பொழுதுபோக்கு சேனல், வரும் அக்டோபர் மாதம் முதல் தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு குழந்தைகள் இணைந்து பாடிய ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலின் சிறப்பு நிகழ்வுடன் Sony VIZHA-வின் பெயரும் புதிய லோகோவும் அறிமுகப்படுத்தப்பட்டன. தமிழ் அடையாளத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த அறிமுக நிகழ்வு, புதிய சேனலின் நோக்கத்தையும் அதன் பயணத்தின் தொடக்கத்தையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.
தமிழ்நாட்டில் முக்கியமான நிகழ்வுகளின் தொடக்கத்தில் ஒலிக்கும் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’, தமிழ் மொழி மற்றும் தமிழர்களின் பெருமையுடன் ஆழமாக இணைந்த ஒன்று. அந்த உணர்வையே தனது அடிப்படையாகக் கொண்டு, தமிழக மண்ணில் இருந்து உருவாகும் கதைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் நோக்கத்துடன் Sony VIZHA களமிறங்குகிறது.
‘விழா’ என்ற பெயரிலேயே ஒரு கொண்டாட்டம்
‘VIZHA’ என்பது தமிழில் கொண்டாட்டம் அல்லது திருவிழா என்ற பொருளைக் கொண்டது. அந்த பெயருக்கு ஏற்ப தமிழ் கதைகள், இசை, குடும்பம், திறமைகள், கனவுகள், உணவு, திருவிழாக்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையை ஒரே பொழுதுபோக்கு உலகிற்குள் இணைப்பதே Sony VIZHA-வின் நோக்கமாக இருக்கிறது.
தமிழர்களின் உணர்வுகளுக்கு நெருக்கமாக இருக்கும் கதைகளுடன், புதிய தலைமுறை பார்வையாளர்களின் ரசனை மற்றும் எதிர்பார்ப்புகளையும் கருத்தில் கொண்டு நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட உள்ளன. வெறும் உள்ளூர் பார்வையாளர்களை மட்டுமே மனதில் கொள்ளாமல், உலகம் முழுவதும் உள்ள தமிழ் பார்வையாளர்களையும் சென்றடையும் வகையில் பிரீமியம் தயாரிப்பு தரத்தில் உள்ளடக்கங்கள் உருவாக்கப்பட உள்ளதாக SPNI தெரிவித்துள்ளது.
உள்ளூர் மண் வாசனை, இயல்பான மனித உறவுகள், கலாச்சாரப் பின்னணி ஆகியவற்றுடன் நவீன கதை சொல்லல் மற்றும் சர்வதேச தரத்திலான தயாரிப்பு அணுகுமுறையை இணைப்பதே Sony VIZHA-வின் முக்கியமான தனித்துவமாக இருக்கப் போகிறது.
தமிழ் ரசனைக்கு ஏற்ப புதிய பொழுதுபோக்கு பயணம்
Sony VIZHA-வில் ஒரிஜினல் நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஃபார்மெட்கள், திரைப்படங்கள் மற்றும் உலகளாவிய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என பல்வேறு வகையான உள்ளடக்கங்கள் இடம்பெற உள்ளன.
குறிப்பாக Celebrity MasterChef Tamil, Tamil Idol போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தமிழ் பார்வையாளர்களை கவரும் வகையில் நிகழ்ச்சி பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. சமையல், இசை, திறமை, குடும்பம், பொழுதுபோக்கு என பல்வேறு தளங்களை ஒரே சேனலில் இணைக்க Sony VIZHA திட்டமிட்டுள்ளது.
தமிழ் கலாச்சாரத்தின் வேர்களை விட்டுவிடாமல், அதே நேரத்தில் புதிய தலைமுறையின் சிந்தனை, வாழ்க்கை முறை மற்றும் ரசனையுடன் பயணிக்கும் நிகழ்ச்சிகளே சேனலின் முக்கிய கவனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோகோவிலும் தமிழ் கலாச்சாரத்தின் சாயல்
Sony VIZHA-வின் புதிய லோகோவில் மஞ்சள் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ நிறங்கள் முக்கியமாக இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் கொண்டாட்டங்களோடு நெருக்கமாக தொடர்புடைய மஞ்சள் தூள் மற்றும் சாமந்திப் பூ போன்ற பாரம்பரிய அடையாளங்களிலிருந்து மஞ்சள் நிறத்துக்கான உத்வேகம் பெறப்பட்டுள்ளது.
மறுபுறம், எலக்ட்ரிக் ப்ளூ நிறம் நவீனத்தன்மை, பிரீமியம் தோற்றம் மற்றும் புத்துணர்ச்சியை பிரதிபலிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பாரம்பரிய தமிழ் அடையாளத்தையும் நவீன பொழுதுபோக்கு உலகையும் ஒரே பிராண்ட் அடையாளத்தில் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
“தமிழ் பார்வையாளர்களுக்கு நெருக்கமாகவும், New Gen ரசனைக்கு ஏற்பவும் இருக்கும்”
Sony Pictures Networks India நிறுவனத்தின் Chief Content Officer – South Regional, ராஜராமன் சுந்தரம், Sony VIZHA அறிமுகம் குறித்து கூறியதாவது:
“Sony VIZHA மூலம் தமிழ் பொழுதுபோக்கு உலகில் ஒரு மனமார்ந்த புதிய பயணத்தை தொடங்குகிறோம். வளமான படைப்பாற்றல் பாரம்பரியம், உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகான மொழி மற்றும் கலாச்சாரப் பெருமையுடன் கூடிய கதைகளுக்கு தமிழ் பார்வையாளர்கள் எப்போதும் மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர்.
இந்த உலகிற்குள் நாங்கள் ஒரு அர்த்தமுள்ள பயணத்தை தொடங்க வேண்டும் என்ற விருப்பத்துடன் நுழைகிறோம். தமிழ் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக உணரக்கூடிய அதே நேரத்தில், புதிய தலைமுறை பார்வையாளர்களின் நம்பிக்கைகள், ஆர்வங்கள் மற்றும் ரசனையை பிரதிபலிக்கும் பிரீமியம் கதைகளை உருவாக்குவதே எங்களது நோக்கம்.
‘தமிழ்த்தாய் வாழ்த்து’ மூலம் வெளிப்படும் தமிழ் பெருமையைப் போலவே, தமிழ் கலாச்சாரத்தின் உணர்வுகளை மையமாகக் கொண்டு உலகளாவிய பார்வையுடன் உருவாக்கப்படும் ஒரு கொண்டாட்டமாக Sony VIZHA இருக்கும். வரும் அக்டோபரில் இந்த சேனலை பார்வையாளர்களிடம் கொண்டு வர ஆவலுடன் காத்திருக்கிறோம்” என்றார்.
Sony நிறுவனத்தின் அனுபவமும், தமிழ் மண்ணின் கதைகளும்
Sony VIZHA-வின் பின்னணியில் SPNI-ன் நீண்டகால தொலைக்காட்சி மற்றும் பொழுதுபோக்கு அனுபவமும் முக்கிய பங்கு வகிக்கிறது. Kaun Banega Crorepati, Indian Idol, CID, Crime Patrol உள்ளிட்ட பல ஆண்டுகளாக வெற்றிகரமாக பயணித்து வரும் நிகழ்ச்சி பிராண்டுகளின் அனுபவத்தை புதிய தமிழ் சேனலிலும் பயன்படுத்த SPNI திட்டமிட்டுள்ளது.
அதேவேளையில், ஏற்கனவே வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளை தமிழில் மட்டும் கொண்டு வருவது என்ற அணுகுமுறையைத் தாண்டி, தமிழ் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையில் இருந்து உருவாகும் புதிய கதைகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இதன் மூலம் தேசிய அளவில் வெற்றிகரமாக இயங்கி வரும் ஒரு முன்னணி ஊடக நிறுவனத்தின் தயாரிப்பு அனுபவமும், தமிழ் மண்ணின் தனித்துவமான கதைகளும் இணையும் புதிய தளமாக Sony VIZHA உருவாக உள்ளது.
அக்டோபரில் முழுமையான அறிமுகம்
Sony VIZHA-வின் முழுமையான நிகழ்ச்சி பட்டியல், புதிய நிகழ்ச்சிகள், முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் சேனல் தொடக்கம் குறித்த கூடுதல் தகவல்கள் அடுத்தடுத்த கட்டங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன.
தமிழ் தொலைக்காட்சி பொழுதுபோக்கு உலகில் ஏற்கனவே பல முன்னணி சேனல்கள் போட்டியிட்டு வரும் நிலையில், பிரீமியம் தரம், தமிழ் மண் வாசனை, புதிய தலைமுறை சிந்தனை மற்றும் உலகளாவிய அணுகுமுறை ஆகிய நான்கு அம்சங்களை மையமாகக் கொண்டு Sony VIZHA தனது இடத்தை உருவாக்க முயற்சிக்கிறது.
தமிழ் கலாச்சாரத்தை வெறுமனே காட்சிப்படுத்தாமல், அதை ஒரு கொண்டாட்டமாக மாற்றி அனைத்து தலைமுறை பார்வையாளர்களுடனும் இணைப்பதே Sony VIZHA-வின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
Sony Pictures Networks India பற்றி
Sony Pictures Networks India Private Limited (SPNI), ஜப்பானைச் சேர்ந்த Sony Group Corporation நிறுவனத்தின் முழுமையாகச் சொந்தமான துணை நிறுவனமாகும். இந்தியாவின் முன்னணி ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான SPNI, பல்வேறு மொழிகள் மற்றும் வகைகளில் தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனங்களை இயக்கி வருகிறது.
இந்தி பொழுதுபோக்கு, மராத்தி, பெங்காலி, தமிழ், திரைப்படங்கள், விளையாட்டு, குழந்தைகள், ஆங்கில திரைப்படங்கள் மற்றும் தகவல் சார்ந்த உள்ளடக்கங்கள் என பல்வேறு பிரிவுகளில் SPNI-ன் சேவைகள் உள்ளன.
Sony VIZHA மூலம் SPNI தற்போது தமிழ் பொழுதுபோக்கு துறையில் தனது அடுத்த முக்கிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது. தமிழ் மொழியின் பெருமையையும், தமிழகத்தின் கலாச்சார வேர்களையும் உலகளாவிய பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அக்டோபரில் புதிய சேனல் தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.
தமிழின் மணமும்… நவீன பொழுதுபோக்கின் வேகமும்… ஒன்றாக இணையும் புதிய ‘விழா’வாக Sony VIZHA உருவாகுமா என்பதே இனி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Sony VIZHA: Sony Pictures Networks India Launches New Premium Tamil Entertainment Brand
New Tamil General Entertainment Channel to Launch in October; Sony VIZHA Promises Premium Stories Rooted in Tamil Culture with a Global Outlook
Mumbai, August 15, 2026:
Sony Pictures Networks India (SPNI) has unveiled Sony VIZHA, its new Tamil general entertainment channel, marking the network’s latest foray into the Tamil entertainment space. The channel is scheduled to launch in October 2026 and aims to bring premium entertainment rooted in Tamil culture, emotions, traditions and everyday life to audiences in India and across the world.
The name and identity of Sony VIZHA were unveiled as part of a special Independence Day event featuring children singing ‘Tamil Thai Vazhthu’, the Tamil anthem traditionally performed at the beginning of important events in Tamil Nadu.
The choice of the song reflects the brand’s larger vision of celebrating Tamil language, identity and cultural pride while taking stories from Tamil Nadu to a wider global audience.
A New ‘VIZHA’ for Tamil Entertainment
The word ‘VIZHA’ means celebration or festival in Tamil. Staying true to its name, the new channel aims to bring together Tamil stories, music, talent, family, dreams, food, festivals and everyday experiences under one entertainment platform.
Sony VIZHA is being positioned as a premium entertainment destination that combines the cultural richness of Tamil Nadu with contemporary storytelling and a modern visual approach.
The channel will focus on stories that emerge from the soil of Tamil Nadu and reflect the love, memories, aspirations, relationships and cultural pride of its people. At the same time, these stories will be crafted with a global sensibility to appeal to Tamil audiences beyond the state and across international markets.
Premium Storytelling for a New Generation
Sony VIZHA plans to offer a mix of original programming, reality formats, movies and global entertainment content, catering to audiences across generations.
Popular formats such as Celebrity MasterChef Tamil and Tamil Idol are expected to be among the key offerings, bringing together food, music, talent and entertainment for Tamil viewers.
The channel aims to go beyond conventional television entertainment by combining Tamil cultural roots with contemporary ideas, new-generation sensibilities and premium production values.
The Colours Behind Sony VIZHA
The Sony VIZHA logo features yellow and electric blue as its primary colours.
The yellow draws inspiration from elements closely associated with celebrations in Tamil Nadu, including turmeric and marigold flowers. Electric blue, meanwhile, represents modernity, a premium visual identity and a sense of freshness.
Together, the colours reflect the brand’s attempt to bring together Tamil tradition and contemporary entertainment.
“Stories that feel close to Tamil audiences while reflecting the aspirations of the New Gen”
Speaking about the launch of Sony VIZHA, Rajaram Sundaram, Chief Content Officer – South Regional, Sony Pictures Networks India, said:
“With Sony VIZHA, we are beginning a heartfelt journey into the world of Tamil entertainment. Tamil audiences have always embraced stories that carry emotion, authenticity and cultural pride, supported by a rich creative tradition and a beautiful language that expresses a wide range of human emotions.
We are entering this space with the genuine intent and ambition to create something meaningful. Our aim is to develop premium stories that feel close to Tamil audiences while also reflecting the aspirations, interests and sensibilities of the New Gen audience.
‘Tamil Thai Vazhthu’ beautifully represents the pride of Tamil and the spirit of taking that pride in all directions. That very sentiment gives momentum to Sony VIZHA. It will be a celebration deeply rooted in Tamil culture and emotions, but created with a global outlook.
We look forward to bringing the channel to audiences this October.”
Backed by Sony’s Entertainment Legacy
Sony VIZHA draws on SPNI’s extensive experience in creating successful entertainment properties across India. The network’s established brands, including Kaun Banega Crorepati, Indian Idol, CID and Crime Patrol, have built strong audience connect over the years.
With Sony VIZHA, SPNI intends to combine this expertise with distinctive Tamil storytelling, local cultural nuances and premium production standards.
Rather than simply adapting established formats, the channel is expected to create entertainment that reflects the unique voice, traditions and changing aspirations of Tamil audiences.
Sony VIZHA Set to Make Its Television Debut in October
Further details about Sony VIZHA’s programming line-up, upcoming shows, talent and the official channel launch are expected to be announced in the coming weeks.
At a time when Tamil television entertainment features several established players, Sony VIZHA aims to carve out a distinct identity through its focus on premium production, Tamil cultural roots, contemporary storytelling and a global perspective.
By turning Tamil culture, stories and everyday experiences into a celebration, Sony VIZHA aims to connect with audiences across generations.
With the soul of Tamil Nadu at its heart and a modern entertainment vision at its core, Sony VIZHA is set to bring a new ‘celebration’ to Tamil television this October.
About Sony Pictures Networks India
Sony Pictures Networks India Private Limited (SPNI) is a wholly owned subsidiary of Sony Group Corporation, Japan. SPNI is one of India’s leading media and entertainment companies, with a portfolio spanning television channels, digital platforms and production businesses across multiple languages and genres.
Its portfolio includes Hindi general entertainment, Marathi and Bengali entertainment channels, movie channels, sports, children’s programming, English-language entertainment and factual content, along with digital entertainment through Sony LIV and other businesses.
With Sony VIZHA, SPNI is now embarking on a new chapter in Tamil entertainment, with the ambition of taking the richness of Tamil stories, culture and identity to audiences in India and around the world.
