Monday, April 28
Shadow

பிக்பாஸ் ஜூலியை உத்தமியாக்கிய படநிறுவனம்

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீர தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார்.

இதனையடுத்து பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளியாக அறிமுகமானார் ஜூலி. இந்நிலையில் இவர், தற்போது ‘கே7 புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்கு ‘உத்தமி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் சமூக சேவகராக நடிக்கிறார் ஜூலி.

மேலும் இந்த படத்தில் ‘ஜூலியும் 4 பேரும்’, ‘தப்பாட்டம்’ போன்ற படங்களில் நடித்த பப்ளிக் ஸ்டார் துரை சுதாகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Leave a Reply