
தற்போது, ‘சர்வர் சுந்தரம்’, ‘ஓடி ஓடி உழைக்கனும்’ உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வரும் சந்தானம், ‘சக்க போடு போடு ராஜா’ என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
விடிவி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் முதல் முறையாக சந்தானத்துடன் விவேக் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் விடிவி கணேஷ், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
காமெடி ஹீரோவாக வெற்றி பெற்ற விவேக்கும் இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்தாலும், அவரால் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடியவில்லை. இதே நிலைதான் வைகை புயல் வடிவேலுக்கும். ஆனால், சந்தானம் ஹீரோவாக நடித்த படங்கள் தொடர்ந்து வியாபார ரீதியாக வெற்றி பெற்று வருவதால், அவருக்கு தொடர்ந்து ஹீரோ வாய்ப்பு குவிகின்றது.
‘சர்வர் சுந்தரம்’ படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்து வரும் வைபவி சாண்டில்யா இந்தப் படத்திலும் நாயகியாக நடிக்கவிருக்கிறார்.
தற்போது முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள இப்படக்குழுவினர் டிசம்பர் மாத இறுதியில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்காக அமெரிக்காவுக்கு செல்கிறார்கள்.
எந்த காமெடி நடிகருடன் நடிக்க மாட்டேன் என்ற விவேக் தன் கொள்கையை விட்டு விட்டு சந்தானத்துடன் கூட்டு சேர்ந்துள்ளார் .
