Sunday, February 25
Shadow

விஜய்யின் வில்லனை காதலிக்கும் சுருதிஹாசன்

ஸ்ருதி ஹாசன், இந்தி நடிகர் ரன்பீர் கபூரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது ஆனால், இதை இருவரும் மறுத்த நிலையில், தற்போது வில்லன் நடிகர் ஒருவருடன் ஸ்ருதிக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜமால். இவர் சூர்யாவின் ‘அஞ்சான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இந்தி படங்களிலும் நடித்து வரும் இவரும், ஸ்ருதியும் ‘டின்சில் டவுன்’ என்ற பி.பி.சி தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது நெருக்கமாக இருந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். மேலும், இதற்கு காரணம், இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாகவும் பாலிவுட்டில் கூறப்படுகிறது.

ஆனால், தாங்கள் நல்ல நண்பர்கள் என்று இவர்கள் கூறினாலும், இவர்கள் படப்பிடிப்பு தளத்தில் காட்டிய நெருக்கத்தை பார்த்தவர்கள், பாலிவுட்டின் புதிய காதல் ஜோடிகளாக உருவாகியுள்ள வித்யுல் – ஸ்ருதி-யின் காதல் விவகாரம் விரைவில் கடைத்தெருவுக்கு வரும், என்று கூறுகிறார்கள்.

Leave a Reply