Tuesday, April 28
Shadow

மாதவனை மன்னிக்கவே மாட்டேன் – கௌதம் மேனன்

தமிழ் சினிமாவில் கௌதம் மேனன் அறிமுகபடுத்தியது மாதவன் மின்னலே படத்தின் கதையை கேட்டு விட்டு இந்த படத்தில் நான் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார் என்று ஒரு செய்தியை பல நாளுக்கு முன் மாதவனே கூறினார் ஆனால் இப்ப புது கதை ஒன்றை கௌதம் மேனன் கூறியுள்ளார் .

தமிழ் சினிமாவில் இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் அது ஒருசிலருக்கு மட்டும்தான். அதில் ஒருவர் கௌதம் மேனன். இவர் படங்களை பார்க்க தேவையில்லை கேட்டாலே சொல்லிவிடலாம் அது கௌதம் படம் என்று.அந்த அளவுக்கு வசனங்கள் முதல் காஸ்டியூம்ஸ் வரை இவரது டச் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு இயக்குனரே இன்னொரு இயக்குனரை பார்த்து பயந்த சுவாரஸ்ய கதை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது மின்னலே பட கதையைக் கேட்ட மாதவன், இதை மணிரத்னம் சார் ஓகே செய்தால்தான் இதில் நான் நடிப்பேன் என கூறிவிட்டாராம்.

மணிரத்னத்தின் தீவிர ரசிகரான கௌதம் அவரிடம் கதை சொல்ல ரொம்பவே பயந்தாராம். எனினும் ஒரு மணிநேரத்தில் கதை சொல்லி முடித்த கௌதமுக்கு இன்னொரு ஷாக், மணிரத்னமுக்கு இந்த கதை சுத்தமாக பிடிக்கவில்லை. எனினும் இதில் மாதவன் ஹீரோவாக நடித்து படம் வெற்றிபெற்றது இன்னொரு தனிக்கதை. இதை சமீபத்திய பேட்டியில் சொன்ன கௌதம், இந்தவொரு விஷயத்துக்காக நான் மாதவனை எப்போதும் மன்னிக்க மாட்டேன் என ஜாலியாக கூறினார்

Leave a Reply