

கொரோனா பாதிப்பால் நம் நாட்டின் வளர்ச்சி விகிதம் முப்பது ஆண்டுகளுக்கு முன் பொருளாதார சீர்திருத்தத்தின் போது இருந்ததை விட மோசமாக இருக்கும் என உலக வங்கி அறிவிச்சிருக்குது.இதன்படி 2021 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 1.5 – 2.8 சதவீதமாக இருக்கும் அப்படீன்னு -இன்னிக்கு வெளியிட்ட தெற்காசிய பொருளாதார பார்வை அறிக்கையில் உலக வங்கி குறிப்பிட்டு உள்ளது.ஏற்கனவே நிதித்துறை மோசமாக இருந்த சூழலில் கொரோனா மேலும் பாதிக்கச் செய்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் மதிப்பிடப்பட்டிருந்த 5.3 சதவீதத்திற்கு பதிலாக பொருளாதார வளர்ச்சி 2.5 சதவீதமாக குறையும் என்று மூடி முதலீட்டாளர்கள் சேவை நிறுவனம் தெரிவிச்சிருக்குது.
