
ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற படம் என்றால் அது காக்கா முட்டை படத்தை தொடர்ந்து மணிகண்டன் இயக்கம் படம் குற்றமே தண்டனை இந்த படமும் ரிலீஸ்க்கு முன்னே உலக அரங்கில் மிகவும் பேசப்பட்ட படம் என்று சொல்லணும் இந்த படமும் ஒரு சிலஸ் விருதுகளை குவித்த படமும் என்று தான் சொல்லணும் .இந்த படம் எப்ப ரிலீஸ் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த படம் என்று தான் குற்றமே தண்டனை
விதார்த் முதன்மை கதாபாத்திரத்திலும், ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா திவாரியா, நாசர், ரகுமான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ‘காக்கா முட்டை’ படத்தில் இரண்டு சிறுவர்களின் அம்மாவாக சிறப்பாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இந்த படத்தில் எதிர்மறை நாயகியாக – வில்லியாக – நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது
காக்கா முட்டை’ போல இந்த படமும் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திரையரங்க வெளியீட்டுக்கு சரியான தேதிக்காக காத்திருந்தார்கள். தற்போது தணிக்கைப் பணிகளும் முடிவுற்று இருப்பதால் செப்டம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது. இப்படத்துக்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது.