விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’. ஆறுமுக குமார் இயக்கி வரும் இப்படத்தில் ஹீரோயினாக நிகரிகா நடித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி பழங்குடி இனத் தலைவராகவும் பல வித்தியாசமான கெட்டப்புகளிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில், படக்குழுவினர் வெளியிட்ட பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், டீசர் மற்றும் சிங்கிள் டிராக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை ஜனவரி 6ம் தேதி மலேசியாவில் நடக்க இருக்கும் நட்சத்திர கலைவிழாவில் வெளியிட இருக்கிறார்கள்.
மேலும் அதே விழாவில், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மற்றொரு படமான ‘ஜுங்கா’ படத்தின் டைட்டில் டீசரையும் வெளியிட இருக்கிறார்கள். இப்படத்தை கோகுல் இயக்கி வருகிறார்.
ஒரே நாளில் விஜய் சேதுபதி படங்களின் ஆடியோ மற்றும் டைட்டில் டீசர் வெளியாவது ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைய இருக்கிறது.