Wednesday, February 8
Shadow

டிராமா படத்தில் ஜன்னி ஐயர் கேரக்டர் குறித்த புதிய அப்டேட்

டிராமா படத்தில் தான் எழுத்தாளராக நடிப்பதாக நடிகை ஜன்னி ஐயர் தெரிவித்துள்ளார்.

நடிகர் அசோக் செல்வன் உடன் தான் நடிக்கும் படம் குறித்து பேசிய பேசிய ஜனனி ஐயர், இந்த படத்தில் நேர்மையான கேக்ரட்டரில் நடிக்கிறேன். படத்தில் எழுத்தாளராக நான் நடிக்கிறேன். இந்த படத்தின் 80 சதவிகித ஷூட்டிங் முடிந்து விட்டது. இன்னும் சில நாட்கள் ஷூட்டிங்கே பாக்கியுள்ளது. இந்த படத்தை ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட நாங்கள் முடிவு செய்துளோம். மேலும் படத்தின் ஷூட்டிங்கிற்காக, நனகுள் கோயம்புத்தூர் மற்றும் ஊட்டிக்கு பயணமாக உள்ளோம். அங்கு பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்றார்.

இந்த படம் மற்றும் மற்றொரு முக்கிய வேடத்தில் நடக்கும் நடிகை ஐஸ்வரியா மேன்னன் கேரக்டர் குறித்து பேசிய சந்தீப், மனிதர்களின் மனதில் உள்ளே ஏற்படும் பிரச்சினை குறித்தும் அதனால் ஏற்படும் பல்வேறு பாதிப்புகள் குறித்தும் முழுமையான எமோசன்களுடன் படத்தில் காட்டப்பட்டுள்ளது. காதல், வெறுப்பு, அமைதி மற்றும் ரத்ததுளிகள் அனைத்தும் கலந்த ஒரு கலவையாக இந்த படம் உருவாகப்பட்டு வருகிறது. இந்த படத்தில் அசோக் செல்வன் இரண்டு விதமான லூக்கில் இருப்பார். அவரது தோற்றங்களுக்கு ஏற்ப படம் பயணிக்கும். இந்த படத்தில் ஐஸ்வரியா மேன்னனும் இணைந்து நடித்துள்ளார் என்றார்.