Friday, October 9
Shadow

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம்

ஜீ ஸ்குவாட் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் புதிய படம்

விஷால் வெங்கட் இயக்கத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் நடிக்கும் புதிய திரைப்படம் – படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில்

சென்னை: லோகேஷ் கனகராஜின் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கும் இப்படத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம் – Bomb’ ஆகிய படங்களை இயக்கிய விஷால் வெங்கட் இப்படத்தை இயக்குகிறார். ஹரிஹரன் ராஜூ கதை எழுத, எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை கே. மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்புப் பணிகளை ஜி.கே. பிரசன்னா மேற்கொள்கிறார்.

ட்ராமா மற்றும் திரில்லர் அம்சங்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்களின் சார்பில் லோகேஷ் கனகராஜ், நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தின் தொடக்க விழா அண்மையில் பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு பிரத்யேக காணொளி மூலம் வெளியிட்டுள்ளது. அந்த காணொளியில் படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகிய இரு தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் விஷால் வெங்கட் இயக்கம், நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோரின் நடிப்பு என எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் படத்தின் தலைப்பு அறிவிப்பை ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

Je Squad and Mythri Movie Makers Join Hands for Vishal Venkat’s New Film

Nassar, Regina Cassandra and Ramesh Thilak headline the upcoming drama thriller; title to be announced soon

Chennai: Je Squad, the production house founded by filmmaker and actor Lokesh Kanagaraj, and leading Indian production banner Mythri Movie Makers have joined hands for an upcoming untitled Tamil film, directed by Vishal Venkat. The film, which stars Nassar, Regina Cassandra and Ramesh Thilak in key roles, has now entered the final leg of its shooting schedule.

The makers have released a special announcement video revealing that the film’s title will be unveiled soon.

Directed by Vishal Venkat, who previously helmed Sila Nerangalil Sila Manithargal and Bomb, the upcoming film is said to be a drama thriller. Hariharan Raju has penned the story, while S.K. Selvakumar is handling the cinematography.

The technical crew includes music composer Hesham Abdul Wahab, art director K. Manoj Kumar and editor G.K. Prasanna.

The film is being jointly produced by Lokesh Kanagaraj, Naveen Yerneni and Y. Ravi Shankar under the banners of Je Squad and Mythri Movie Makers.

The film’s launch ceremony was recently held in a traditional manner, following which shooting commenced and progressed at a brisk pace. With production now nearing completion, the makers have released the announcement video, further building anticipation around the project.

The collaboration between Je Squad and Mythri Movie Makers, along with the combination of Vishal Venkat, Nassar, Regina Cassandra and Ramesh Thilak, has generated interest among moviegoers. With the title announcement expected soon, fans are eagerly awaiting further updates on the film.