
வயது தடையில்லை… சாதனைக்கு எல்லையில்லை! சென்னையில் மூத்தோர் தடகளப் போட்டி தொடக்கம்.
சென்னையில் தொடங்கியது மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப்!
30 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் ஆர்வமுடன் பங்கேற்பு – நடிகர்கள் சூரி, விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்கள்
சென்னை, அக்டோபர் 3:
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில், 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் “Chennai District Masters Athletic Championship 2026” தடகளப் போட்டிகள் சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தின் வெளிப்புற மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கின.
மாஸ்டர்ஸ் தடகள வீரர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், அவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை மேலும் அதிகரிக்கவும் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.
சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் M. செண்பகமூர்த்தி, செயலாளர் K. சுரேஷ், பொருளாளர் திருமதி சசிகலா மற்றும் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் இப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்பு
போட்டியின் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர்கள் சூரி, விஜய் ஆண்டனி, A. மயில்வாகனன் IPS, SDAT-ன் Joint Chief Executive Officer மற்றும் Mission Olympic 2036 சிறப்பு அதிகாரி, சூர்ய பிரகாஷ் M.P., Executive Director, Fon Fore Chemicals Group, மற்றும் S.N. ஜெயமுருகன், SNJ Group of Companies ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை சிறப்பித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்.
வயதுக்கு எல்லை இல்லை; சாதனைக்கு எல்லை இல்லை!
30 வயதை கடந்த நிலையிலும் உடல் ஆரோக்கியத்தையும் விளையாட்டு ஆர்வத்தையும் தொடர்ந்து பராமரித்து வரும் ஏராளமான வீரர், வீராங்கனைகள் இப்போட்டிகளில் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
ஓட்டப்பந்தயம், குதிப்புப் போட்டிகள், எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகளப் பிரிவுகளில் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மைதானத்தில் வீரர்களின் உற்சாகமான பங்கேற்பு பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறும் இந்த தடகளப் போட்டிகளில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் பல மாஸ்டர்ஸ் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.
வயது ஒரு தடையல்ல… விளையாட்டுக்கும் சாதனைக்கும் வயது வரம்பில்லை என்பதை எடுத்துக்காட்டும் வகையில் நடைபெறும் இந்த மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப், மூத்த வீரர்களிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Age Is No Barrier, There Are No Limits to Achievement: Masters Athletics Championship Begins in Chennai
Chennai District Masters Athletics Championship 2026 Gets Underway
Men and women above 30 participate enthusiastically; actors Soori and Vijay Antony among the special guests
Chennai, October 3:
The Chennai District Masters Athletics Association has commenced the “Chennai District Masters Athletics Championship 2026”, featuring men and women aged above 30, at the outdoor stadium of the Jawaharlal Nehru Stadium in Chennai today.
The championship is being organised to provide Masters athletes with a platform to showcase their talent and to further encourage sporting enthusiasm and a healthy lifestyle among them.
The event is being conducted under the coordination of M. Shenbagamoorthy, President of the Chennai District Masters Athletics Association; K. Suresh, Secretary; Mrs. Sasikala, Treasurer; and other members of the association’s executive committee.
Special Guests Grace the Inaugural Event
The inaugural ceremony was attended by special guests, including film actors Soori and Vijay Antony, A. Mayilvahanan IPS, Joint Chief Executive Officer of SDAT and Special Officer for Mission Olympic 2036, Surya Prakash M.P., Executive Director of Fon Fore Chemicals Group, and S.N. Jayamurugan of SNJ Group of Companies.
The special guests also presented prizes and certificates of appreciation to the winners in various categories, honouring their performances and achievements.
No Age Limit to Excellence
Despite being above the age of 30, a large number of men and women who continue to maintain their fitness and passion for sports are participating in the championship with great enthusiasm.
Athletes are competing in a variety of disciplines, including track events, jumping events and throwing events, showcasing their sporting skills and determination. Their energetic participation on the field has received an enthusiastic response from spectators.
The two-day athletics championship will continue through October 4, with more Masters athletes from across Chennai district expected to participate and showcase their abilities.
The Chennai District Masters Athletics Championship 2026 stands as an inspiring example that age is no barrier to sport and achievement, creating renewed enthusiasm and motivation among senior athletes and highlighting the message that there is no age limit to pursuing fitness, competition and excellence.
