
வீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் விவேகம். இப்படத்தில் முதல்முறையாக அஜித் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார்.

மேலும் அக்ஷரா ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அக்ஷரா ஹாசன், உளவுத்துறை அதிகாரியாக நடிக்கிறாராம். கமல் ஹாசன் மகள் என்பதற்காக எந்த வித பாகுபாடு இல்லாமல் தன் கதாபாத்திரத்துக்கு என்ன வேண்டுமோ அதை இயக்குனர் சொன்னதை அப்படியே செய்கிறாராம் அது மட்டும் இல்லாமல் தன் வேலை முடிந்தவுடன் அடுத்து நடிப்பவர்கள் காட்சியும் பார்த்து தன் நடிப்பை மேலும் சிறப்பாக செய்கிறாராம்.
இந்நிலையில் இவருக்கு மொட்டை அடித்து ஒரு படத்தில் நடிக்கவேண்டும் என ஆசையாம். கமல் மகள் இல்லையா எதையாவது வித்தியாசம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கத்தானே செய்யும் எந்த ஹீரோயினுக்கும் இப்படியொரு விபரீத ஆசை இருக்காது என்பது கவனிக்கத்தக்கது
