Monday, January 17
Shadow

பெஸ்ட் ஆக்டர் அவார்ட் வாங்கிக் கொடுத்த ஜோக்கர் – மினி லுக்!

1981ஆம் ஆண்டு நடைபெறும் கதை. இதில் ஜோக்கர் எப்படி உருவானார் என்பதை விவரிக்கிறது.

அடக்கமுடியாமல் சிரிக்கும் குறைபாட்டால் அவதிப்படும் ஆர்தர் பிளேக்கிற்கு, இக்குறைபாட்டால் தனிக்குரல் நகைச்சுவையாளராக வாய்ப்பும் பறிபோகிறது. ஒரு நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு பேசுகிறார். ஆனால் அதனை நாடு முழுவதும் கிண்டல் செய்து பேசுகிறார் டிவி தொகுப்பாளரான ராபர்ட் நீரோ. முதலில் இதற்காக மகிழும் பீனிக்ஸ், பின்னர் அது தன்னை கிண்டல் செய்வதற்கான முயற்சி என கோபமாகிறார். அவர் அதற்கு பதிலாக என்ன செய்தார். என்பதை ஜோக்கர் படம் சொல்லுகிறது.

கொஞ்சம் சுருக்கமாக சொல்வதானால் ஒருவரது சிரிப்பு, இன்னொருவருக்குச் சிரிப்பாக இல்லாது போகும் . அதே சிரிப்பு சிலருக்கு வலியை உருவாக்கும். இப்படியான ஒருவரின் சிரிப்பை இன்னொருவர் பகிர இயலாத ஏற்றத்தாழ்வுகள் பெருகத் தொடங்கும்போது, சிரிப்பு ஒரு நோய்க்கூறாக மாற்றம் அடைகிறது.

ஆனாலும் எல்லாவிதமான அழுத்தங்கள், பிறழ்வுகள், பாகுபாடுகளுக்கு மத்தியிலும் மக்களைச் சிரிக்க வைக்க வேண்டிய பொறுப்புள்ள கோமாளி, இப்படிப்பட்டச் சூழ்நிலையை எதிர்கொள்கையில் குழப்பமடைகிறான். அவனது சிரிக்கும் முகமூடிக்குப் பின்னால் உள்ள கோமாளியின் துயர உடல் புழுங்கிக் கனக்கத் தொடங்குகிறது; அப்போது அவன் சிரிப்பு கொடூரமாகிறது என்பதை மிரளும்படி வழங்கி இருப்பார்

இந்த படத்தின் நிறம், இசை போன்றவை கூட ஜோக்கரின் இருண்ட மனநிலையை சொல்வது போலவே இருக்கும்.

அனாதையாக பிறந்தவரை எடுத்து வளர்க்கும் அவரது தாய்க்கும் மனநிலை பிறழ்வு பிரச்னை அவரின் வாழ்வை பரிகசிக்கிறது. கோதம் நகரில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் மருத்துவ சிகிச்சைகளை நகர நிர்வாகம் தடாலடியாக நிறுத்துகிறது.

இதனால் ஏற்கெனவே சிதைந்த மனம் கொண்ட பீனிக்ஸின் சிரிப்பை நிறுத்தமுடியாமல் போகிறது. அவரின் கற்பனை உலகிலும் அவரால் வாழ முடியாமல் போகிறது. மூன்று நபர்களால் ரயிலில் கேலிக்கு உள்ளாகும் பெண்ணைக் காப்பாற்ற போக, அதன் விளைவாகவே ஆர்தர் பிளாக்கினுள் ஜோக்கர் என்ற கதாபாத்திரம் உருவாகிறது.

டிவி நிகழ்ச்சியில் அவர் பேசும் வசனங்கள் பணக்காரன் – ஏழை வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டும்.

இயக்குநர் டாட் பிலிப்ஸ், கதாசிரியர் ஸ்காட் சில்வர் டாக்சி ட்ரைவர், கிங் ஆஃப் காமெடி ஆகிய படங்களைப் பார்த்து சூழ்நிலைகளை உள்வாங்கி படத்தை எடுத்திருக்கின்றனர் இதனால் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது.

ஹீத் லெட்ஜர் ஜோக்கரை ஒருவிதமாக நடித்தார் என்றால் ஜாக்குயின் பீனிக்ஸ் வேறுவிதமாக அதனை மாற்றிக்காட்டியதன் காரணமாக கிடைத்த எக்ஸ்ட்ரா பரிசிது.

CLOSE
CLOSE