Monday, December 9
Shadow

ஜூலை 11ல் பிறந்த நாள் கொண்டாடுபவர்கள்

இசையமைப்பாளர் மணிசர்மா பிறந்த தினம்

இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இயற்பெயர் யனமண்டிர வெங்கட சுப்பிரமணிய சர்மா என்பதாகும்.

இவர் இசையமைத்த தமிழ்ப் படங்கள்

யூத், மலை மலை, வெற்றிச்செல்வன், ஏழுமலை, திருப்பாச்சி

நடிகை தீப்தி நம்பியார் பிறந்த தினம்

புனேவில் பிறந்த இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார். தமிழில் எங்கேயும் எப்போதும் திரைப்படம் மூலம் அறிமுகமானார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

பட்டாளம், எங்கேயும் எப்போதும், யுகம், துப்பாக்கி, துள்ளி விளையாடு, உங்கள் விருப்பம், வெள்ளை காகிதம்

நடிகை சாஹித்யா ஜகநாதன் பிறந்த தினம்

இவர் சென்னையில் நடந்த விவெல் மிஸ் சென்னை போட்டியில் வெற்றி பெற்றவர். இவரது சினிமா பயணம் நீதானே என் பொன் வசந்தம் என்ற படத்தில் நடித்ததின் மூலம் தொடங்கியது. இதை தொடர்ந்து ஆர் பார்த்திபனின் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்திலும் நடித்தார். இதுமட்டுமின்றி கடந்த 2017ல் நடந்த இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் VJ-வாக பணியாற்றியுள்ளார். மேலும், பிரிமியர் லீக் பேட்மிண்ட்டன் போட்டியிலும் பணியாற்றி உள்ளத்தோடு, DT Next பத்திரிகைக்ககாவும் எழுதி வருகிறார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

நீதானே என் பொன் வசந்தம், கதை திரைக்கதை வசனம் இயக்கம், அந்தாதி