
விஜய் சேதுபதி என்றால் படம் கியாரண்டி என்பது சினிமா விநியோகிஸ்தர்களுக்கு மட்டும் இல்லை ரசிகர்களுக்கும் தான் என்று கண்டிப்பாக சொல்லலாம் அந்த வகையில் இந்த படமும் கண்டிப்பாக அரங்குக்கு சென்று பார்க்கலாம் அதும் குடும்பத்தோடு அதுக்கும் கியாரண்டி.
படத்தின் முதல் காட்சியில் இருந்து சிரிக்க ஆரம்பம் ஆகும் அது கிளைமாக்ஸ் காட்சி வரை சிரிக்கலாம் அந்த அளவுக்கு இரு நகைசுவை படம் விஜய் சேதுபதி என்றால் நிச்சயம் காமெடி இருக்கும் அதுவும் இவரும் இயக்குனர் கோகுலும் சேர்ந்தால் மேலும் காமெடி இதற்க்கு தானே ஆசை பட்டாய் பாலகுமார படம் போல செம காமெடி ரகளை படத்தின் டைட்டில் ஜூங்கா இதற்க்கு இயக்குனர் கோகுல் கொடுக்கும் விதம் அரங்கை அலறவைக்கிறது சிரிப்பால் சரண்யா பொன்வண்ணன் நடிப்பால் இதை எல்லாம் எழுத்தில் சொல்லவதை விட நீங்கள் அரங்குக்கு சென்று ரசித்தல் தான் அந்த சுவையின் அருமை தெரியும்
சரி படத்தை பற்றியும் நடித்தவங்களை பற்றியும் பார்ப்போம் விஜய் சேதுபதி தயாரித்து நாயகனாக நடித்து உள்ள படம் இவருக்கு ஜோடியாக சாயிஷா இன்னொரு ஜோடி மடோனா செபாஸ்டின் மற்றும் யோகிபாபு.சரண்யா பொன்வண்ணன்,விஜயா பாட்டி, சுரேஷ் மேனன், ராதாரவி,மொட்டை ராஜேந்திரன்,K.P.Y.பாலா மற்றும் பலர் நடிப்பில் சித்தார்த் விபின் இசையில் டெட்லி ஒளிப்பதிவில் கோகுல் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் ஜூங்கா
ஓபனிங் சீன்லயே டான் ஜுங்காவை (விஜய் சேதுபதி) என்கவுண்டரில் போட ரெடியாகுது போலீஸ். அதற்காக அவரை சென்னையில் இருந்து தடாவுக்கு (என்கவுண்டர் நாளே தடா தான)அழைத்து செல்கிறார்கள் இன்ஸ்பெக்டர் வினோத்தும், அதிகம் பேசும் ஏட்டு துரைசிங்கமும் (மொட்டை ராஜேந்திரன்). அங்கிருந்து விரியும் பிளாஷ் பேக் காட்சிகளில் பொள்ளாச்சி, பாரீஸ் என ஒரு டிரிப் அழைத்து செல்கிறார்கள்.
பொள்ளாச்சியில் ஒரு சாதாரண பஸ் கண்டெக்டராக இருக்கும் ஜுங்காவுக்கு, தெலுங்கு பொண்ணு மடோனா செபாஸ்டியன் மேல காதல். அவருக்காக உள்ளூர் ரவுடிகளை புரட்டி எடுக்கிறார் ஜுங்கா. அப்போது தான் தெரிய வருகிறது தான் ஒரு டான் பெமிலி என்பது. தாத்தா டான் லிங்காவும், அப்பா டான் ரங்காவும், டானாக இருப்பதற்காகவே செலவு செய்து சொத்துக்களை அழித்தவர்கள். தான் அப்படி இல்லாமல், டான் பிசினசை லாபகரமாக செய்து, இழந்த சினிமா தியேட்டரை அடைவேன் என தாய் சரண்யாவிடம் சத்தியம் செய்து சென்னை புறப்படுகிறார் ஜுங்கா. அவர் எப்படி தியேட்டரை மீட்கிறார்? போலீஸ் என்கவுண்டர் என்னானது என்பது டர்ராகும் மீதிக்கதை.
படத்தின் முக்கிய உயிர்நாடியே விஜய் சேதுபதி தான். அவரை நம்பியே… அவருக்காகவே காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தின் தயாரிப்பாளரும் தான் தான் என்பதால், இன்னும் கூடுதல் உழைப்பை தந்திருக்கிறார் விஜய் சேதுபதி. தனது வழக்கமான சீரியஸ் காமெடி வசனங்களில் லைக்ஸ் அள்ளுகிறார். படத்தில் இவருக்காகவே நிறைய வசனங்கள் இருக்கின்றன. போட்ட திட்டம் சொதப்பும் போது டான் டாவடிக்குக் கூடாது என சாயிஷாவிடம் அவர் பேசும் காட்சி செம ஹைலைட்.
விஜய் சேதுபதியை வைத்து இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா எனும் காமெடி பிளாக் பஸ்டர் படத்தை கொடுத்த கோகுல் தான் இப்படத்தின் இயக்குனர். சுவாரஸ்யமான பிளாஷ் பேக் காட்சிகள், பிளாக் காமெடி, சின்னதாக மற்ற படங்களை கலாய்க்கும் ஸ்பூப் காமெடி என முதல் பாதியை அலுப்பில்லாமல் கொடுத்திருக்கிறார். இரண்டாம் பகுதி மேலும் சிரிப்பு வெடி என்று தான் சொல்லணும் முதல் பாதியில் மடோனா செபாஸ்டின் பகுதியும் அவரின் பாடும் தான் கொஞ்சம் டல் சாயிஷா ஹ்ம்ம் என்று சொல்லும் அளவுக்கு இரண்டாம் பகுதி

விஜய் சேதுபதியை மட்டுமே நம்பி படத்தை எடுத்திருக்கிறார். அதனால் தானோ என்னவோ, கதை, திரைக்கதை, லாஜிக் இது பற்றி எல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை போல. இருந்தாலும், கஞ்ச டான் செய்யும் அட்ராசிட்டிகளுக்காக இயக்குனரை பாராட்டலாம். ஆனா என்னதான் கஞ்ச டானாக இருந்தாலும், ஐஸ் கட்டி ஆறுல நீந்தி போறதெல்லாம் டூ மச் பாஸ்.
விஜய் சேதுபதியுடன் சேர்ந்து அட்ராசிட்டி செய்யும் அசிஸ்டென்ட் டான் யோ யோவாக யோகிபாபு. காட்சிக்கு காட்சி தெறிக்க விடுகிறார். ரைமிங், டைமிங் வசனங்களால் கைதட்டல்களை அள்ளுகிறார்.
டான் அம்மாவாக வரும் சரண்யாவுக்கு இது ஒரு புது களம். மெட்ராஸ் தமிழில் பேசி அசால்டாக வூடு கட்டுகிறார். அதிலும் டான் பாட்டி விஜயா அம்மா ஒவ்வொரு காட்சியிலும் கிச்சுகிக்சு மூட்டுகிறார். சுரேஷ் மேனனை கலாய்ப்பது, சவுண்டு கொடுத்து அளப்பறையை கூட்டுவது… எல்லாமே ஆசம்… ஆசம்…
சாயிஷா, மடோனா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள். இருவருக்குமே பெரிதாக வேலை ஒன்றும் இல்லை. செகன்ட் ஹீரோயின் மடோனாவுக்கு ஒரு பாட்டு, நான்கு காட்சிகள். முதல் ஹீரோயின் சாயிஷாவுக்கு மூன்று பாட்டு, நிறைய காட்சிகள். தனது அபாரமான நடனத்தால், ரசிகர்களை ஆட்டிப்படைக்கிறார். நடிப்பிலும் சும்மா பின்னி எடுத்து இருக்கிறார் நிச்சயம் தமிழ் சினிமாவின் நட்சத்திரமாக ஜொலிப்பார் சாயிஷா. சாயிஷாவின் தந்தையான நிறைவான நடிப்பை தந்திருக்கிறார் சுரேஷ் மேனன்.
படத்தின் மேலும் பலம் என்றால் அது விஜய் சேதுபதி பாட்டியாக வரும் விஜயா பாட்டி என்று தான் சொல்லணும் இரண்டாம் பகுதியில் இந்த பாட்டி கீ ரோல் என்று சொல்லணும் இது வரைதுணை நடிகையாக வந்த பாட்டி இந்த படத்தின் மூலம் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளார் .
மொத்தத்தில் ஜுங்காவின் ஒரே ஆசை எல்லாம் காமெடி ஒன்று மட்டும் தான். அதற்கு கேரன்டி, வாரன்டி கார்டு எல்லாம் டிக்கெட்டுக்கு உள்ளே வைத்து கொடுக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் ஜாலியாக பொழுதை கழிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஜுங்கா ஒரு காமெடி விஷூவல் டிரீட். Rank 3.5/5
