Saturday, April 18
Shadow

‘ராட்சசி’ திரை விமர்சனம் (முன் மாதிரி) Rank 4/5

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகை ஜோதிகா நடிப்பில் செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களுக்கு பின்னர் புதுமுக இயக்குனர் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ராட்சசி.

பல நல்ல சினிமாகள் தமிழ் சினிமாவில் வந்துகொண்டுதான் இருக்கு அனால் எல்லா சினிமாவிலும் நல்ல கருத்துகளை சுமந்து வருபது இல்லை என்று சொன்னால் மிகையாகது இன்றைய கல்வி முறையை பற்றியும் இன்றைய மாணவர்களை பற்றி பல படங்கள் வந்துள்ளது ஆனால் இந்த ராட்சசி முற்றிலும் வித்தியாசமாக வந்துள்ளது. ஆம் இன்று அரசாங்க பள்ளிகளில் நடக்கும் கொடுமைகளை பற்றியும் அனைத்து வசதிகள் இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் இருக்கும் ஆசிரியர்களை பற்றியும் தான் இந்த( பா)டம்

அரசுப் பள்ளி ஆசிரியை கீதா ராணி (ஜோதிகா) நடித்துள்ள இந்த படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

பா புதூர் அரசு பள்ளிக்கூடம் இந்த பள்ளிகூடத்தில் நடக்க கூடாத சம்பவங்கள் எல்லாம் நடக்கும் மாணவர்கள் படிக்காமல் புகைபிடிப்பது சாதி சண்டை சரியான சீருடை இல்லாமல் முழுக்க் முழுக்க அராஜகத்தில் ஈடுபடும் மாணவர்கள் பா புதூர் கிராம மக்கள் இந்த பள்ளிகூடத்தை மிக மோசமாக விமர்சிப்பார்கள் அனால் எந்த ஒரு வித நடவடிக்கை எடுக்க மாட்டர்கள் ஆசிரியர்களுக்கு இது ஒரு பொழுதுபோக்கு இடம் மாணவர்களை பற்றி சிறிதும் கவலைபடாமல் இருக்கும் ஆசிரியர்கள் இந்த சூழ்நிலையில்இந்த பள்ளி கூடத்துக்கு தலைமை ஆசிரியராக வரும் ஜோதிகா மிகவும்கரரான தலை ஆசிரியராக வருகிறார்.

பள்ளியில் நடக்கும் ஊழல் ஆசிரியர்கள் மெத்தனம் மாணவர்களின் சீர்குலைப்பை வந்த ஒரே மாதத்தில் செய்கிறார் அதோடு ஊழல் செய்யும் உதவி தலைமை ஆசிரியரை சஸ்பென்ஸ் செய்கிறார். மற்ற ஆசிரியர்களிடம் மிகவும் கடுமையாக நடக்கிறார். ஆதாவது மாணவர்களுக்கு ஒழுக்கமான முறையில் பாடம் எடுக்க வேண்டும் மாணவர்களை ஊக்கபடுத்தவேண்டும் என்று மிகவும் கடுமையாக கூறுகிறார் ஓய்வு இல்லாமல் பள்ளியையும் மாணர்வர்களையும் முன்னுக்கு கொண்டு வரவேண்டும் தனியார் பள்ளிக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்று உழைக்கிறார் இதனால் ஏற்படும் பாதிப்பு அதோடு இதற்கு முன் இருந்த பள்ளி ஆசிரியர்கள் பாடம் எடுக்க சோம்பேறித்தனத்தால் 74 மாணவர்கள் பெயில் செய்கிறார்கள் இதனால் அந்த மாணவர்கள் பலர் கூலி தொழிலுக்கும் சிலர் தவறான பாதையிலும் செல்கிறார்கள்

இந்த மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அவர்களை பாஸ் செய்து பத்தாம் வகுப்புக்கு அனுப்புகிறார் இதனால் ஏற்படும் பாதிப்பு தான் மீதி படம்  இதற்கு நடுவில் தனியார் பள்ளி  தாளார் ஹரிஷ் பெராடி இந்த அரசு பள்ளியால் நம் பள்ளிக்கு ஆபத்து என்று கருதி இந்த பள்ளியும் ஜோதிகா வளர்ச்சியையும் தடுக்க போடும் திட்டம்  இதற்கிடையில் இந்த மாணவர்கள் பரிட்சை எழுதினார்களா பாஸ் செய்தார்களா என்பது தான் மீதிகதை

பள்ளி கூடங்களை பற்றி பல கதைகள் அவந்துள்ளது அனால் இந்த படம் முற்றிலும் ஒரு வித்தியாசமான ஒரு படம் ஒவ்வொரு காட்சியும் படத்தில் இயக்குனரின் அனுபவம் தெரிகிறது படத்துக்கு முழு பலம் என்றால் அது படத்தின் வசனம் ஒவ்வொரு காட்சியிலும் வசனங்கள் மிகவும் பலம் கொடுக்கிறது அதேபோல படத்தில் நடித்து இருக்கு ஒவ்வொருவரும் பலம் காரணம் படத்தின் கதை ஓட்டம் தெரிந்து அந்த கதாபாத்திரத்துக்கு மிகவும் நேர்த்தியாக நடித்து இருக்கிறார்கள்.

அதேபோல இயக்குனர் படத்தில் பல காட்சிகளில் நம்மை புருவத்தை உயர்த்த வைக்கிறார் ஆபாசம் இல்லாமல் காதல் கட்டிபிடி இப்படியான காட்சிகள் இல்லாமல் கதை ஓட்டத்தை மிகவும் அழகாக செதுக்கி இருக்கிறார் வில்லனுக்கும் ஒரு நேர்த்தியை வைத்துள்ளார் பள்ளியின் இதவி ஆசிரியர் கவிதா பாரதி தனியார் பாளி தளாளர் ஹரிஸ் பெராடி யுடன் சேர்ந்து ஜோதிகாவுக்கு எதிராக நடக்கும் போது ஹாரிஸ் பெராடி ஸ்கூல்க்கு மலர் கொடுத்து கொடுத்து அனுப்பு என்பார்.அதை கவிதா பாரதி என்னமோ மலர் கொத்து கொடுத்திங்க பாம் தான் வெடித்து எல்லாம் சாவாங்க என்று பார்த்த பாராட்டி அனுப்பி இருக்கீங்க என்று சொல்லும் போது ஹாரிஸ்  பெராடி கவிதா பாரதியை மிகவும் மோசமாக திட்டி குழந்தைகள் இருக்கும் இடத்தில பாம் வைப்பதா இவனை முதலில் இங்கு இருந்து துரத்து அவன் நின்ன இடத்தை கழுவி விடு என்று சொல்லும் இடம் மிகவும் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கிறார் இயக்குனர் .

ஜோதிகா காட்சிக்கு காட்சி நடிப்பில் மிளிர்கிறார் படத்தின் டைட்டில்க்கு ஏற்ப ராட்சசி மாதிரி தான் நடித்துள்ளார். சண்டைகாட்சிகளிலும் சரி மாணவர்களுடன் சரிக்கு சரியாக பழகும் காட்சிகளிலும் மிகவும் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் ராட்சசி படம் தமிழ் சினிமாவின் முன் மாதிரி அதேபோல அரசு ஆசிரியர்கள் மட்டும் இல்லை தனியார் பள்ளி ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய ஒரு படம் அரசாங்கம் இந்த படத்தை பார்த்து அரசு பள்ளிகள் மீது தனி கவனம் சஐளுத்த ஒரு சிறந்த கருத்தை சொல்லும் படம் அனைத்து பெற்றோர்களும் பார்க்கவேண்டிய ஒரு படம்

ராட்சசி அழகிய ராட்சசி Rank 4/5