Monday, May 20
Shadow

கடைசி விவசாயி திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

விஜய் சேதுபதி நடிப்பில் மணிகண்டனின் இயக்கத்தில் உருவான கடைசி விவசாயி படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம்.

கிராமத்தில் விவசாயியாக வாழும் மாயாண்டிக்கு விவசாயத்தை தவிர வேறெதுவும் தெரியாது. அதே கிராமத்தில் யானையை வைத்து பிழைப்பு நடத்துகிறார் யோகிபாபு. மேலும் வாழ்க்கையில் எதிலுமே நாட்டமில்லாமல் இருக்கிறார் விஜய் சேதுபதி. இவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களும் , விவசாயத்தின் அருமையை உணர்த்தும் படமாகவும் உருவாக்கப்பட்டது தான் இந்த கடைசி விவசாயி திரைப்படம். இக்கதையை மிகவும் யதார்த்தமாகவும், ரசிக்கும்படியும் எடுத்துள்ளார் மணிகண்டன்.

படத்தில் மாயாண்டி என்ற விவசாயியாக நல்லாண்டி என்பவர் நடித்திருக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் இவரது நடிப்பு தனியாக தெரிகிறது. அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நல்லாண்டி. மேலும் யானையை வைத்து பிழைப்பு நடத்துபவராக யோகிபாபுவும், வாழ்க்கையை வெறுத்தவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களது நடிப்பை பார்த்தல் நாம் கிராமத்தில் அன்றாட பார்க்கும் மனிதர்களை போல அவ்வளவு இயல்பாக உள்ளது. மேலும் படத்தில் நீதிபதியாக நடித்த ரேய்ச்சல் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தின் கதையுடன் ஒன்றிய இவர்களது நடிப்பு படத்திற்கு பக்கபலமாக இருந்தது.

படத்தின் பிளஸ்:
கிராமத்தில் வாழ்ந்த உணர்வு ஏற்படுத்தும் படப்பிடிப்பு, படத்தில் நடித்தவர்களின் எதார்த்தமான நடிப்பு,

மொத்தத்தில் இப்படம் அனைவர்க்கும் பிடித்த படமாக இருக்கும்.