Saturday, October 12
Shadow

காதல் வசப்படும் காஜல் அகர்வால்

காதல் பற்றி சொல்லாத சினிமாவே கிடையாது. இதுபோல் காதல் கிசு கிசு இல்லாத நடிகைகளும் கிடையாது. ஒன்றிரெண்டு பேர்தான் அதற்கு விதிவிலக்கு. சமீப காலமாக காஜல் அகர்வால் பற்றிய காதல் விவகாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இப்போது அவர் பிடித்தமான வாலிபர் கிடைத்தால் காதலிக்க தயார் என்கிறார். இதுபற்றி காஜல் அகவர்வாலே சொல்கிறார்…

“காதல் என்பது வார்த்தைகளால் அனுபவிக்க முடியாத இனிய அனுபவம். அதை அனுபவிக்க இனி காதலிக்க தயாராக இருக்கிறேன்.

நான் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை. காதலிக்க ராஜகுமாரன் தேவை இல்லை. எனக்கு பிடித்த ஜோடியாக இருந்தால் போதும். அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என் எண்ணங்களை நேசிப்பவராக இருக்க வேண்டும். அவரது சொந்த வாழ்க்கையை விட என் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். என் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

எப்போதும் நான் அவரைப் பற்றி யோசிக்கும் அளவுக்கு பிடிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒருவரை காதலிப்பேன்.

ஆண்களுக்கு இணையாக மட்டுமல்ல, அதிகமாகவும் பெண்கள் சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள். இதை பெண்கள் விஷயத்தில் ஆண்கள் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் பழைய மாதிரி பெண்களை வீட்டு வேலைகளை செய்ய வற்புறுத்தக்கூடாது. வீட்டு வேலைகளை ஆண்களும் செய்ய வேண்டும். நானும் சாதாரண பெண்தான் எனக்கும் கனவுகள் உண்டு.”

Leave a Reply