Thursday, December 1
Shadow

காலங்களில் அவள் வசந்தம் திரை விமர்சனம் (3.5/5)

ராகவ் மிர்தாத் இயக்கத்தில், நடிகர்கள் கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி நடிப்பில் வெளியாகியுள்ள காலங்களில் அவள் வசந்தம் திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

நம்ம ஹீரோ கௌஷிக் ஐடி கம்பெனியில் வேலை செய்கின்றார். இவரின் குடும்பம் உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பமாகும். வீட்டிற்கு செல்ல பிள்ளையான நம்ம ஹீரோ திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர். காதல் என்பது திரைப்படங்களில் வருவதுதான். அது மாதிரியான ஒரு வாழ்க்கையை தானும் வாழ வேண்டும் என நினைத்து ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கின்றார்.

ஆனால் அந்த காதல் ஒரு கட்டத்தில் பிரிவில் முடிகின்றது. அதன் பின் நம்ம ஹீரோ அப்பாவின் நெருங்கிய நண்பர் மகள் அஞ்சலி நாயர் தனது குடும்பத்தோடு நம்ம ஹீரோ வீட்டிற்கு வராங்க. நம்ம ஹீரோவை பார்த்ததும் அஞ்சலி காதலில் விழுகின்றார். பின் அவரே நேரடியாக கவுசிக்கிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்கின்றார்.

பின் இருவரின் திருமணமும் நடக்கின்றது. ஒரு கட்டத்தில் கவுசிக்கின் பழைய வாழ்க்கை அஞ்சலிக்கு தெரியவர ஹீரோவை பிரிய நினைக்கின்றார். இறுதியில் நம்ம ஹீரோவின் வாழ்க்கை என்ன நடக்கின்றது என்பதே படத்தின் மீதி கதையாகும். இத்திரைப்படத்தில் கௌஷிக் அறிமுக நடிகர் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

பெண்களைச் சுற்றித் திரியும் ஒரு வாலிபர் என்னென்ன செய்வாரோ அதனை ரசனையுடன் செய்து இருக்கின்றார் ஹீரோயின் அஞ்சலி நாயர். தனக்கான வேடத்தை சிறப்பாக செய்திருக்கின்றார். இரண்டாவது ஹீரோயின் ஹிரோஷினி சில காட்சிகளில் வந்தாலும் உண்மையான காதல் என்ன என்பதை தன் நடிப்பால் அழகாக வெளிப்படுத்தி இருக்கின்றார்.

படத்தின் பிளஸ்:
நாயகன் கெளசிக்கின் நடிப்பு, ஹரி எஸ் ஆர் இசை, கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு,

படத்தின் மைன்ஸ்:
ஹிரோஷினியின் ஹாசினி சிண்ட்ரோம் படத்தில் பெரிதாக ஒட்டவில்லை

மொத்தத்தில் காலங்களில் அவள் வசந்தம் ஓர் ஓவியம்.