
சமீபத்தில் கோடம்பாக்கத்தை மிகவும் உலுக்கிய சம்பவம் என்றால் அது கமல் கௌதமி பிரிவு இதை கௌதமியே அறிவித்தார். இதற்கு பதில் கமல் அறிவித்தார் என்று ஒரு செய்தி வெளியானது இதற்கும் எந்த சமந்தம் இல்லை என்று கமல் கண்டனம் தெரிவித்தார்.
என் பெயரில் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது அநாகரிகச் செயல் என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் ட்விட்டரில் எழுதி வெளியிட்ட பதிவில், ”இத்தருணத்தில் என் பெயரால் யாரோ அறிக்கை விட்டு விளையாடுவது விவேகமற்ற அநாகரிகச் செயல். நான் இச்சமயம் அறிக்கை ஏதும் வெளியிடுவதாய் இல்லை” என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசனும், கெளதமியும் திருமணம் செய்யாமல் ஒன்றாக 13 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். ‘தசாவதாரம்’, ‘தூங்காவனம்’ உள்ளிட்ட கமல் நடித்த படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் கெளதமி.
கமல்ஹாசன் – கெளதமி இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாகவும் தகவல் வெளியானது. இதனை கெளதமி உறுதிப்படுத்தி தன் அதிகாரபூர்வ வலைப்பூ பக்கத்தில் கனத்த இதயத்துடன் ஒரு பதிவை வெளியிட்டார். நானும், கமல்ஹாசனும் பிரிந்துவிட்டோம் என்று அதில் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து கமல் பெயரில் ஓர் அறிக்கை இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் உலா வந்தது. அது, கமல்ஹாசன் பயன்படுத்தும் மொழிநடையில் இருந்ததால் வைரல் ஆக பரவியது.
இந்நிலையில், அந்த அறிக்கையை தான் வெளியிடவில்லை என்றும், யாரோ என் பெயரில் அறிக்கை வெளியிடுவது விவேகமற்ற அநாகரிகச் செயல் என்றும் கமல் ட்விட்டரில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
