உதயநிதி ஸ்டாலின் மீண்டும் தன் நடிப்பு மூலம் ரசிகர்களை மிகவும்கவர்ந்துள்ளார் ‘மனிதன்’ படத்தில் சிறப்பாக இயக்குனர் அகமது சரியாக செய்திருந்த நிலையில் தற்போது இயக்குனர் சீனுராமசாமியும் அருமையாக செய்துள்ளார்.

மிக சிறந்த கிராமிய கதையை இயக்குனர் சீனு ராமசாமி சொல்லி இருக்கிறார் படம் என்பதை விட பாடம் என்று சொன்னால் மிகையாகாது .காட்சிக்கு காட்சி இயக்குனர் கை வண்ணம் தெரிகிறது கதைக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் படத்துக்கு பலம் ஒவ்வொருவரும் கதை ஓட்டத்தை உணர்ந்து நடித்து இருப்பது மேலும் பலம்  ஒட்டு மொத்த படத்தை இயக்குனர் தான் தாங்கி பிடித்துள்ளார்.நடிகர்கள் அவருக்கு பக்க பலமாக உள்ளனர்.

இந்த படத்தின் உதயநிதி ஸ்டாலின் ,தமன்னா , வடிவுகரசி,வசுந்ரா பூ ராமசாமி மற்றும் பலர் நடிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் சீனு ராமசாமி இயக்கதில் வெளிவந்து இருக்கும் படம் தான் கண்ணே கலைமானே

 

மதுரை அருகே உள்ள கிராமத்தில் விவசாய பட்டப்படிப்பு படித்த உதயநிதி சொந்த ஊர் விவசாயிகளுக்காக பல்வேறு உதவிகளை செய்கிறார். குறிப்பாக இயற்கையான மண்புழு உரங்களை உற்பத்தி செய்து செயற்கையான கெமிக்கல் உரங்களை கைவிடுமாறு அறிவுரை கூறுகிறார். அந்த ஊரின் வங்கிக்கு மேனேஜராக வரும் தமன்னா, வங்கியில் லோன் வாங்கி கட்டாமல் இருக்கும் உதயநிதியை கடுமையாக திட்டுகிறார். அதன்பின் ஏற்படும் மோதல், பின் காதல், திருமணம், என போகும் கதையில் திடீரென ஒரு சோகம். அந்த சோகம் என்ன? அதற்கான தீர்வு என்ன என்பதே இந்த படத்தின் முடிவு

வழக்கமான அலட்டல் நடிப்பை கைவிட்டு இயல்பான நடிப்புக்கு மாறியுள்ளார் உதயநிதி. இதேபோன்ற கதையை தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் முன்னணி நடிகராகிவிடலாம். ரொமான்ஸ் காட்சிகளில் இந்த முறை திறம் பட நடித்துள்ளார் அதோடு சென்டிமென்ட் காட்சிகளிலும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

 

தமன்னாவுக்கு இந்த படம் நிச்சயம் நல்ல பேரை பெற்றுத்தரும். தமன்னா என்றால் கவர்ச்சி என்று எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே. முழுக்க முழுக்க குடும்பப்பெண்ணாக அதே நேரத்தில் தனது கேரக்டரின் அழுத்தத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.

 

வடிவுக்கரசி, வசுந்தரா, பூ ராமசாமி, ஆகியோர்கள் கொடுத்த கேரக்டரை சிறப்பாக செய்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் வைரமுத்து வரிகளில் அனைத்து பாடல்களும் சூப்பர். கிராமத்து பின்னணி இசையும் அவர் ஒரு இளைய இசைஞானி என்பதை நிரூபிக்கின்றது

சீனுராமசாமி குடும்பத்துடன் உட்கார்ந்து பார்க்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார். காமெடிக்கு என தனி டிராக் இல்லை, வலிய திணிக்கும் ஆக்சன் காட்சிகள் இல்லை, ஆங்காங்கே நீட், விவசாயி தற்கொலை குறித்த காட்சிகள் என படத்தை நகர்த்தி கொண்டு சென்றுள்ளார். இடைவேளைக்கு பின் படம் கொஞ்சம் மெதுவாக நகருவதை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் ஒரு கிராமதத்து கவிதை Rank 3.75/5

Related