
அதிரடியை அள்ளி வீசிய ‘சர்தார் 2’ டீசர்… கார்த்தியின் மாஸ் கம்பேக்கிற்கு ரசிகர்கள் கொண்டாட்டம்!
‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் ‘சர்தார் 2’ திரைப்படம் மீது ரசிகர்களிடம் ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை மேலும் பல மடங்கு உயர்த்தும் வகையில் தற்போது வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ டீசர், இணையம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். லக்ஷ்மண் குமார் தயாரிக்க, விவிஒய் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் இஷான் சக்சேனா இணைந்து தயாரித்துள்ளார்.
வெளியான டீசர், ஆரம்பக் காட்சியிலிருந்தே விறுவிறுப்பை கூட்டும் வகையில் அமைந்துள்ளது. அதிநவீன ஆக்ஷன், சர்வதேச தரத்திலான காட்சியமைப்புகள், ரகசிய உளவுப் பணிகளை மையமாகக் கொண்ட கதைக்களத்தின் சுவாரஸ்யமான சுட்டிக்காட்டுகள், கார்த்தியின் மாறுபட்ட தோற்றங்கள் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. எந்தக் கதையையும் முழுமையாக வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும் விதத்தில் டீசர் வடிவமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கார்த்தியின் திரைநடிப்பு, ஸ்டைலான தோற்றம் மற்றும் அதிரடி காட்சிகள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. டீசர் வெளியான சில நிமிடங்களிலேயே பல்வேறு சமூக வலைதளங்களில் டிரெண்டாகி, ரசிகர்களின் பாராட்டுகளை குவித்து வருகிறது.
படத்திற்கு இசையமைப்பாளர் சாம். சி.எஸ். பின்னணி இசை அமைத்து டீசரின் தாக்கத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் காட்சிகளை சர்வதேச தரத்தில் பதிவு செய்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது. சண்டைக் காட்சிகளுக்கு திலீப் சுப்பராயன் வடிவமைப்பு செய்துள்ள நிலையில், கலை இயக்கத்தை ராஜீவன் நம்பியார், படத்தொகுப்பை வேலுக்குட்டி கவனித்துள்ளனர்.
தயாரிப்பு நிர்வாகத்தை ஏ. பால் பாண்டி மேற்கொண்டுள்ள நிலையில், ஏ. வெங்கடேஷ் இணைத் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
டீசரின் பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து, விரைவில் படத்தின் இசை வெளியீடும், முழுமையான டிரெய்லரும் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தாண்டி, இன்னும் பெரிய அளவில் ரசிகர்களை கவரும் அதிரடி அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக ‘சர்தார் 2’ அமையும் என்ற நம்பிக்கையை, தற்போது வெளியாகியுள்ள டீசர் உறுதியாக ஏற்படுத்தியுள்ளது.

Karthi’s ‘Sardar 2’ Teaser Unveiled; Raises Expectations with Power-Packed Action
The official teaser of ‘Sardar 2’, starring Karthi in the lead and directed by P.S. Mithran, has been unveiled, receiving an overwhelming response from fans across social media. Backed by S. Lakshman Kumar under the banner of Prince Pictures, in association with Ishan Saksena of IVY Entertainment, the film is mounted on a grand scale and promises to take the franchise to the next level.
Following the blockbuster success of Sardar, the sequel has been one of the most eagerly anticipated Tamil films. The newly released teaser has further heightened expectations by offering a glimpse into the film’s larger-than-life action sequences, stylish visuals, and Karthi’s intriguing new avatars.
Without revealing too much of the storyline, the teaser teases a high-stakes spy thriller packed with international-scale action, intense chase sequences, and gripping moments. Karthi’s commanding screen presence, coupled with the film’s slick execution, has become a major talking point among movie enthusiasts.
Within minutes of its release, the teaser began trending across social media platforms, with fans praising its stunning visuals, adrenaline-pumping action, and the scale of production. Many have hailed it as one of the most exciting teaser launches of the year.
The film features music composed by Sam C.S., whose powerful background score adds intensity to the teaser. George C. Williams has handled the cinematography, while the action sequences have been choreographed by Dhilip Subbarayan. Rajeevan Nambiar serves as the production designer, with Velukutty handling the editing.
The production is managed by A. Paul Pandi, while A. Venkatesh is the co-producer.
Following the tremendous response to the teaser, the makers are expected to unveil the film’s audio and official trailer soon. ‘Sardar 2’ is scheduled for a worldwide theatrical release on September 10.
With its spectacular visuals, high-octane action, and an even grander cinematic scale, Sardar 2 appears poised to surpass the success of its predecessor and deliver an unforgettable big-screen experience.
