இந்திய தேசியக் கொடியின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்ற வருகிறது ‘ஃப்ளாக்’ திரைப்படம் – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!
இந்திய தேசியக் கொடியின் பெருமையை உலக அரங்கில் பறைசாற்ற வருகிறது ‘ஃப்ளாக்’ திரைப்படம் – நவம்பர் 20 முதல் திரையரங்குகளில் வெளியீடு!
இந்தியாவின் தேசியக் கொடியான மூவர்ணக் கொடியின் பெருமையையும், அதன் பின்னணியில் உள்ள உணர்வுகளையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃப்ளாக்’ (FLAG). ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரப்பிரகாஷ் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
வழக்கமான திரைப்படங்களிலிருந்து மாறுபட்டு, இந்திய தேசியக் கொடியை மையக்கருவாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் இயக்குநர் எஸ்.பி. பொன் சங்கர் ஏற்றுள்ளார். படத்தொகுப்பை வரதராஜன் கவனிக்க, ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம் இணைந்து இசையமைத்துள்ளனர்.
‘இட்லி கடை’, ‘டோரதி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள குட்டி தனுஷ் எ...









