தோழா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு கோகுல் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் படம் காஷ்மோரா. இப்படத்தில் கார்த்தி முதல்முறையாக மூன்று கேரக்டரில் நடித்துள்ளார். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக அண்மையில் வெளியானது.
இந்த படம் யாரும் எதிர்பார்க்காத பிரமாண்டம் மட்டும் இல்லை புதுவிதமான கதை இந்திய படமா இல்லை ஆங்கிலமா என்ற அளவுக்கு ஒரு மேகிங் மிக முக்கிய படங்களுக்கு சாவல் விடும் படமாக அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகது
இப்படத்தில் ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளார்கள். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இப்படம் உலகம் முழுவதும் சேர்த்து இரண்டு நாட்களில் மட்டும் ரூ. 25 கோடி வசூல் செய்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் இப்படத்தை பார்த்த நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தியின் நடிப்பை மனதாரப் பாராட்டியுள்ளார். இயக்குனர் கோகுலின் அணி தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பை தந்திருப்பதாகவும் அவர் வாழ்த்தியுள்ளார்.