Saturday, April 26
Shadow

காஷ்மோரா திரைவிமர்சனம்!! உலக தர சினிமா!! (ரேங்க் 4.5/5)

மிரட்டும் திரைக்கதை!! மிருகத்தனமான நடிப்பு!!

நடிகர் கார்த்தியின் வரலாற்றில் ஒரு பிரம்மாண்ட மையில் கல்லை காஷ்மோரா படம் மூலம் எட்டி உள்ளார் அதற்கு அவர் இயக்குனர் கோகுல் அவர்களுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும் மொட்டை கார்த்தி ராஜ்நாத் ஆகா அசூர மொரட்டு தனத்தை காமித்து படை தளபதி கார்த்தி உள்ளார் நிச்சயம் இந்த கதையை ரெடி பண்ணதிற்கு கோகுலை பாராட்டி ஆகா வேண்டும்

படத்தில் இரு கார்த்தி ஒருவர் ராஜ்நாத் இன்னொருவர் காஷ்மோரா ராஜ்நாத் கதை மன்னர் கால கதை அதில் ராஜ்நாத் தான் வில்லன் பெண்மோகம் கொண்டவராக நடித்து உள்ளார் ஒரு அரசவையில் படை தளபதியாக இருப்பார் அந்த அரசவையின் இளவரசியான நயன்தாராவை மணம் முடித்து கொள்ள ஆசை பாடுவார் அதை நிறை வேர்த்தியும் கொள்வார் அதன் பொருட்டு நயன்தாரா கார்த்தியை கொன்றுவிடுவார் இது ஒரு கதை

அடுத்த கதை.., இதில் கார்த்தி காஷ்மோரா கதாபாத்திரத்தில் பேய் ஓட்டுபவராக வருகிறார் அதாவது பேய் ஓட்டுகிறேன் என்று மக்களை ஏமாத்தி பணம் சம்பாதிக்கும் இவர் ஒரு கட்டத்தில் ஒரு எம்.எல்.ஏ வீட்டிற்கு பேய் ஓட்ட வருகிறார்.

அவர் செய்யும் சில போர்ஜரி வேலையின் காரணமாக , யதார்த்தமாக அந்த எம்.எல்.ஏவிற்கு நல்லது நடக்கின்றது. பிறகு ஒரு கட்டத்தில் எம்.எல்.ஏ வீட்டில் ரைடு வர, காஷ்மோரா நம்பிக்கையான ஆள் அவர் வீட்டில் பணத்தை வைய்யுங்கள் என சொல்கிறார்.

அந்த நேரத்தில் ஒரு பங்களாவில் பேய் ஓட்ட சென்ற கார்த்தி அங்கு வசமாக மாட்ட, எம்.எல்.ஏவின் பணத்தை கார்த்தியின் அப்பா விவேக் சுருட்டிக்கொண்டு ஓட, அவரும் அந்த பங்களாவில் மாயமாக வந்து மாட்டுகிறார்.
இவர்கள் குடும்பம் ஏன் அந்த பங்களாவிற்கு வருகிறது, இவர்களை அழைத்து வந்த மாய சக்தி எது என்பது அடுத்தடுத்து காட்சிகளில் தெரிகிறது. பிறகு கார்த்தி மற்றும் அவருடைய குடும்பத்தினர் பங்களாவில் இருந்து வெளியே வந்தார்களா? என்பதே மீதிக்கதை.

கார்த்தி ஒன் மேன் ஷோவாக கலக்குகிறார், நயன்தாரா சில மணி நேரங்கள் வந்தாலும் மனதில் நிற்கும்படியான கதாபாத்திரம்வி வேக்கின் ஒன் லைன் காமெடி காட்சிகள், சில போலி சாமியார்களின் முகத்திரையை தைரியமாக காட்டியதற்காகவே பாராட்டலாம்.

ஒளிப்பதிவு மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் மிரட்டலோ மிரட்டல்

மொத்தத்தில் நல்லா பேய் ஓட்டி இருக்கிறார் காஷ்மோரா.

Leave a Reply