Tuesday, February 11
Shadow

“காற்றின் மொழி” இதயத்தை தொடும் படமாக இருக்கும்: நடிகர் வித்தார்த்

தனித்துவமிக்க கதைகளையும், கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக நடிகர் விதார்த் இருந்து வருகிறார். இதற்கு, அவர் நடித்த குரங்கு பொம்மை, ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் குற்றமே தண்டனை போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். தற்போது அவர் நடித்து வரும் படம் காற்றின் மொழி. இந்த படத்தில் அவர் ஜோதிகாவின் கணவராக நடித்துள்ளார்.

நடிகர் வித்தார்த் சமீபத்தில் லயோலா கல்லூரியின் LECET-இல் நடந்த கலச்சார விழா ஒன்றில், BOFA மீடியா இந்தியா பிரைவேட் லிமிடெட்டின் தயாரிப்பாளர் ஜி தனஞ்சேயனுடன் இணைந்து பங்கேற்கார்.

இந்த விழாவில் மிகுந்த மகிழ்ச்சியுடன் பங்கேற்ற வித்தார்த் பேசுகையில், உங்களுக்கு எதையும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நான் காலேஜ் ஸ்டுடண்ட்டான உங்களிடம் இஎருந்து கற்று கொளல் வேண்டியது நிறைய உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா இண்டஸ்ட்ரீஸ்களில் முன்னணியில் உள்ள பலர் லயோலாவில் பட்டம் பெற்றவர்கள் தான். நான் இந்த காலேஜில் படிக்கவில்லை என்றாலும், 1996ல் எனது நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த காலேஜில் இருந்து வெளியே வந்தவர் தான். அதனால் நான் இங்கு ஹாட்டலில் தங்கி இருப்பேன். இந்த ஹாட்டலில் கிடைக்கும் புரோட்டவை என்னால் மறக்கவே முடியாது என்றார்.

மேலும் அவர் பேசுகையில், நான் வித்தியாசமான கேரக்டர்களின் நடித்து வந்தாலும், யார் நல்ல கதையுடன் வருகிறார்களோ, அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்க கதை தேர்வு செய்து வருகிறேன். எனது சமீபத்திய திரைப்படத்தை தியேட்டர்களில் பார்த்த லயோலா கல்லூரியின் மாணவர்கள், எனது நடிப்புக்காக என்னை பாராட்டினார்கள்.

பாராட்டுகளே ஒரு நடிகருக்கு கிடைக்கும் மிகபெரிய கவுரவமாகும் என்று இதுவே என்னை காற்றின் மொழி போன்ற படங்களில் நடிக்க செய்தது. இந்த படத்தின் ஒரிஜினல் வெர்சன் படமான ‘Tumhari Sulu’ படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள். திடீரென ஒரு நாள் தயாரிப்பாளர் தனஞ்சேயன் சார், என்னை கூப்பிட்டு, இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். இந்த படத்தை பார்த்த பின்னர், என்னை அவர் அழைத்ததற்கான காரணத்தை தெரிந்து கொண்டேன் என்றார்.

காற்றி மொழி படம் குறித்து அவர் பேசுகையில், இந்த படம், சிம்பிளாக இருக்கும் என்பதோடு இதயத்தை தொடும் கதை அம்சத்துடன், அனைவரும் பொருந்து வகையிலும் இருக்கும், ஜோதிகா மேடத்துடன் பணியாற்றியது பெரிய அனுபவமாக இருந்தது. டப்பிங் பணிகளின் போது ஒரு சில படங்களை முழு திருப்தி அளிக்கும் படமாக அமையும், ஆனால் காற்றின் மொழி படம் எனக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது.

தயாரிப்பாளர் தனஞ்சேயன் பேசுகையில், நான் இந்த காலேஜில் படிக்கவில்லை என்றபோதும், இங்கு படிக்கும் மாணவரின் பெற்றோராக இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. எனது மகள் ரேவதி இங்கு பதித்து 2015ம் ஆண்டில் பட்டம் பெற்றவர். உங்கள் படிப்பை சரியாக முடித்த பின்னர் உங்களுக்கு பிடித்தமான துறையை தேர்வு செய்ய வேண்டும், அந்த துறையில் சிறப்பாக பணியாற்றி முன்னேற வேண்டும் என்றார்.