Friday, January 17
Shadow

நான் சரிபட்டு வர மாட்டேன்னு சொல்லிவிட்டு அட்ஜஸ்ட் செய்த நடிகை

பாலிவுட் நடிகையான மந்திரா பேடி சிம்புவின் மன்மதன் படம் மூலம் கோலிவுட் வந்தார். அதன் பிறகு 14 ஆண்டுகள் கழித்து தற்போது அடங்காதே படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இது குறித்து படத்தின் இயக்குனர் ஷண்முகம் முத்துசாமி கூறியதாவது,

என் படத்தில் விஜயசாந்தியை தான் போலீஸ் அதிகாரியாக நடிக்க வைக்க நினைத்தேன். ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் அரசியலில் படுபிசியாக இருப்பதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. விஜயசாந்தி நடித்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.

வேறு யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தபோது தான் மந்திரா பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தேன். அந்த புகைப்படத்தில் அவர் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து ஃபிட்டாக இருப்பது தெரிந்தது. உடனே அவரை தொடர்பு கொண்டபோது அவர் அடங்காதே படத்தில் நடிக்க விருப்பமாக இல்லை.

நான் தென்னிந்திய படங்களுக்கு சரிபட்டு வர மாட்டேன். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்றார். நான் ஸ்க்ரிப்ட் அனுப்பி வைக்கிறேன். படித்துப் பாருங்கள், அப்படியும் பிடிக்காவிட்டால் சொல்லுங்கள் என்றேன். ஸ்க்ரிப்ட்டை படித்ததும் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் மந்திரா. நானே எனக்கு டப்பிங் பேசுகிறேன் என்று கூறினார். மேலும் சம்பள விஷயத்தில் அட்ஜஸ்ட் செய்தார் என்றார் ஷண்முகம்.

பாலிவுட் நடிகைகள் தென்னிந்திய படங்களில் நடிக்க வரும் போது கூடுதல் சம்பளம் கேட்டு அடம்பிடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில் மந்திரா சம்பள விஷயத்தில் விட்டுக் கொடுத்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி. பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள அடங்காதே படத்தில் சரத்குமாரும் உள்ளார். சுரபி, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.