Tuesday, April 22
Shadow

கிருஷ்ணா நடிக்கும் கழுகு – 2 படப்பிடிப்பு முடிவடைந்தது

கிருஷ்ணா, பிந்து மாதவி நடிப்பில் கிருஷ்ணா நடிக்கும் கழுகு – 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28 ஆம் தேதி தொடங்கியது. 30 நாட்களில் வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பை முடிப்பதாக உறுதி கூறிய இயக்குநர் சத்யசிவா 28 நாட்களில் மொத்த வசன காட்சிகளுக்கான படப்பிடிப்பையும் இன்று முடித்து கொடுத்துள்ளார்.

பாடல் காட்சிகளுக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் கடைசி வாரத்தில் துவங்க இருக்கிறது. படத்தை அக்டோபர் முதல் வாரத்தில் வெளியிட தயாரிப்பாளர் சிங்காரவேலன் முடிவெடுத்துள்ளார். முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து நூறு நாட்களுக்குள் மொத்த படப்பிடிப்பு பணிகளையும் முடித்து படத்தை வெளியிட இருப்பது தமிழ் சினிமாவின் சமீபத்திய சாதனையாக பார்க்கப்படுகிறது. 4 கோடியில் தயாராகியுள்ள இந்த படத்தின் வியாபாரம் 7 கோடியை தாண்டும் என சினிமா விமர்சர்கள் கணித்துள்ளனர்.