Sunday, September 25
Shadow

லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

விஷால் நடிப்பில் உருவாகும் ‘சண்டக்கோழி 2’ படத்தை இயக்கவிருக்கிறார் லிங்குசாமி. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. தற்போது விஷாலுடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

‘சண்டக்கோழி 2’ படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் லிங்குசாமி. 2017 பிப்ரவரி மாத இறுதியில் இதன் படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.

இப்படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் படத்தின் கதை, திரைக்கதை பணிகள் அனைத்துமே முடிவு பெற்றுவிட்டது. இதர தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மட்டும் ‘சண்டக்கோழி 2’ முடித்தவுடன் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

Leave a Reply