Thursday, April 30
Shadow

“கெணத்த காணோம்” வெற்றி: இயக்குநரின் நினைவில் நெகிழ்ந்த யோகி பாபு — மனமார்ந்த நன்றி!

“கெணத்த காணோம்” வெற்றி: இயக்குநரின் நினைவில் நெகிழ்ந்த யோகி பாபு — மனமார்ந்த நன்றி!

 

தமிழ் திரைப்பட உலகில் நகைச்சுவை நடிகராக தன்னை நிலைநிறுத்திய யோகி பாபு, தற்போது உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட கதைகளில் முன்னணி நடிகராகவும் தனித்த அடையாளத்தை உருவாக்கி வருகிறார். அந்த வரிசையில், அவரது சமீபத்திய படம் “கெணத்த காணோம்” ரசிகர்களும் விமர்சகர்களும் ஒருமித்த பாராட்டுகளை அளித்து, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக நகைச்சுவை வேடங்களில் ரசிகர்களை சிரிக்க வைக்கும் யோகி பாபு, இந்தப் படத்தின் மூலம் உணர்ச்சி மிக்க கதாபாத்திரத்திலும் தனது நடிப்பு திறனை மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக, பல படங்களில் பிஸியாக இருந்தபோதிலும், “கெணத்த காணோம்” படத்திற்காக அவர் மேற்கொண்ட முழுமையான ப்ரோமோஷன் முயற்சிகள் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

படத்தின் வெற்றியை முன்னிட்டு யோகி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“இந்த வெற்றி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில், இயக்குநர் சுரேஷ் சங்கையா அவர்கள் இந்த தருணத்தை நேரில் காண முடியாமல் இருப்பது எனக்கு வருத்தமாக உள்ளது. ஆனால், அவரின் கனவும் நோக்கும் ‘கெணத்த காணோம்’ படத்தின் மூலம் எப்போதும் உயிருடன் இருக்கும். இந்த வாய்ப்பை எனக்கு அளித்த அவருக்கு என் மனமார்ந்த நன்றி. இப்படத்தை உருவாக்கிய முழு படக்குழுவிற்கும், தொடர்ந்து ஆதரவு வழங்கிய ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள். இந்த வெற்றி, இனி மேலும் அர்த்தமுள்ள படங்களில் நடிக்க என்னை உற்சாகப்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.

“கெணத்த காணோம்” திரைப்படத்தின் இந்த வெற்றி, யோகி பாபுவின் நடிகரான புதிய பரிமாணத்தையும், தரமான கதைகளை தேர்வு செய்யும் அவரது முயற்சியையும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

“Kenatha Kaanom” Success: Yogi Babu Gets Emotional, Expresses Heartfelt Gratitude in Director’s Memory

Yogi Babu, who has firmly established himself as a leading comedian in Tamil cinema, is now carving a distinct identity as a lead actor in content-driven films. In that line, his latest film “Kenatha Kaanom” has been receiving unanimous praise from both audiences and critics, and is running successfully in theatres.

Known for making audiences laugh with his comic roles, Yogi Babu has once again proven his versatility by delivering a strong, emotionally driven performance in this film. Notably, despite being busy with multiple projects, his extensive and dedicated promotional efforts for “Kenatha Kaanom” are being seen as a key factor behind the film’s success.

Speaking about the film’s success, Yogi Babu said:
“This moment brings me immense happiness, but also a sense of sadness. It pains me that director Suresh Sangaiya is not here to witness this success. However, his vision and intent will live on forever through ‘Kenatha Kaanom.’ I am deeply grateful to him for giving me this opportunity. My thanks to the entire team who created this heartfelt film, and to the media for their continuous support. This success motivates me to keep delivering more meaningful films in the future.”

The success of “Kenatha Kaanom” further reinforces Yogi Babu’s evolving journey as an actor and his commitment to choosing strong, content-oriented scripts.