பொதுவாக இயக்குனர் சீனு ராமசாமி திரைப்படம் என்றாலே குடும்பத்துடன் சென்று பார்க்கக்கூடிய படமாக தான் இருக்கும் பொதுவாக ஒரு சமூக கருத்துடன் வரும் சீனு ராமசாமி இந்த முறை அண்ணன் தங்கை பாசத்தை மையமாக வைத்து வந்து இருக்கிறார்.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனம் சார்பில் டி. அருளானந்து தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கியிருக்கும் படம் கோழிப்பண்ணை செல்லதுரை
இதில் யோகி பாபு, புதுமுகங்கள் ஏகன், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, சத்யா, லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உட்பட பலர் நடித்திருக்கும் படம் என்.ஆர். ரகுநந்தன்இசையில், அசோக்ராஜ், ஒளிப்பதிவில் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இருக்கும் படம் கோழி பண்ணை செல்லதுரை
சரி கதைகுள் போகலாம்:
தேனி மாவட்டத்தில், ஐஸ்வர்யா தத்தா ராணுவத்தில் பணிபுரியும் கணவனையும், இரண்டு குழந்தைகள் செல்லதுரை (ஏகன்) மற்றும் சுதா (சத்யா) ஆகியோரை தவிக்கவிட்டு விட்டு பாடகர் ஒருவருடன் ஒடி விடுகிறார்.இதனால்;; இரண்டு குழந்தைகளையும் பாட்டி பொறுப்பில் அனாதையாக விட்டுவிட்டு ராணுவ தந்தை சென்று விடுகிறார்.பாட்டியும் கொஞ்ச நாளிலேயே இறந்து போக, கோழிப்பண்ணை வைத்திருக்கும் மாமா பெரியசாமி (யோகி பாபு) கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவன் தங்கைக்கும் ஆதரவாக இருக்கிறார்.பெற்றோர்களின் செயலால் தலைகுனிவுக்கு உள்ளாகும் செல்லதுரை மாமா பெரியசாமி ஆதரவில் வளர்ந்து படிப்பில் நாட்டம் இல்லாததால் அவரின் இறைச்சிக் கடையில் வேலை செய்து பணத்தை சேர்த்து வைக்கிறார். தங்கை சுதாவை கல்லூரியில் சேர்த்து நன்றாக படிக்க வைக்கிறார். இதனிடையே இறைச்சிக் கடை எதிரில்; பானைக்கடை வைத்திருக்கும்; தாமரைச்செல்வி (பிரிகிடா) செல்லதுரையை ஒரு தலையாக காதலிக்கிறார். இந்நிலையில் சுதாவை கல்லூரி நூலக ஆசிரியரின் மகன் காதலிக்க தொடங்குகிறார். முதலில் மறுப்பு தெரிவிக்கும் சுதா பின்னர் சமாதானமடைந்து காதலிக்கிறார். இவர்களின் காதல் செல்லதுரைக்கு தெரிந்து விட, தாயைப் போல் தங்கை வழி தவறி சென்று விடக்கூடாது என்று தங்கை காதலனை அடித்து உதைத்து துரத்தி விடுகிறார். அதன் பின் செல்லதுரை தங்கைக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தாரா? இதற்கு தங்கை சுதா சம்மதித்தாரா? காதலர்களின் நிலை என்ன? அனாதையாக விட்டு விட்டு சென்ற பெற்றோர்களை செல்லதுரை சந்தித்தாரா? அதன் பின் என்ன நடந்தது? என்பதே மீதிக்கதை.
இரக்க குணம் கொண்ட மாமா பெரியசாமியாக யோகி பாபு அழுத்தமான முதிர்ந்த பக்குவத்துடன் நடித்துள்ளார்.
செல்லதுரையாக ஏகன் விரைப்பான முகபாவத்துடன் முரட்டு இளைஞராகவும், தன் தங்கை மீது அளவு கடந்த பாசத்துடன் இருப்பதும், காதலியை கண்டும் காணாதது போல் செல்வது, பெற்றோர்களை கண்டவுடன் கோபம் ஏற்பட்டாலும் அவர்களின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு உதவுவது என்று அனைத்து காட்சிகளிலும் இயல்பாக நடித்துள்ளார். செல்லதுரையை துரத்தி துரத்தி காதலிக்கும் பிரிகிடா, கள்ளக்காதலால் வாழ்க்கையை தொலைக்கும் தாயாக ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, பாசமுள்ள தங்கையாக சத்யா யதார்த்தமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தியுள்ளார்.இவர்களுடன் லியோ சிவகுமார், பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி ஆகியோர் பக்கமேளங்கள்.
இசை: என்.ஆர். ரகுநந்தன், ஒளிப்பதிவு: அசோக்ராஜ், எடிட்டர்: ஸ்ரீPகர் பிரசாத், கலை இயக்குனர்: ஆர்.சரவணா அபிராமன் ஆகியோர் படத்திற்கேற்ற பங்களிப்பை கச்சிதமாக கொடுத்துள்ளனர்.
குழந்தைகள், உதவும் கரங்கள், உழைப்பால் உயர்ந்து பாசத்துடன் படிப்பை கொடுக்கும் அண்ணன், தங்கையின் காதல், எதிர்ப்பு என்று படத்தை எதிர்பார்த்த காட்சிகளுடன் அமைத்து சென்டிமெண்ட் கலந்து லட்சியங்களுக்கு குறைவில்லாத கலவையாக கொடுத்துள்ளார் சீனுராமசாமி. முதல் காட்சியில் பிரிந்த சென்ற பெற்றோர்களை இறுதி காட்சியில் காணும் போது ஏற்படும் வெறுப்பை மறந்து அவர்களின் காயங்களுக்கு மருந்தாக இருக்கும் மகனின் உன்னத செயல் மனிதாபிமானத்துடன் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி
மொத்தத்தில் கோழி பண்ணை செல்லதுரை பாசமலர்