Thursday, March 12
Shadow

கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ முதல் பார்வையை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் 

கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ முதல் பார்வையை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் 

இந்திய ஊடக மற்றும் திறமை மேலாண்மை துறையில் முன்னணி இடம் பெற்றுள்ள நிறுவனம், தனது முதல் திரைப்பட தயாரிப்பாக ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். கோயம்புத்தூர் மண்ணின் மைந்தரான அவர், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டி, படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை, ‘’ படத்தை இயக்கிய கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார். மேலும், அவர் இப்படத்தில் நாயகனாகவும் நடித்துள்ளார்.

காதலும் நகைச்சுவையும் கலந்த குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய கலகலப்பான திரைப்படமாக ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ உருவாகியுள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

பிரபல மலையாள நடிகையும், ‘’ படத்தில் நடித்தவருமான இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் குறித்து இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் கூறுகையில், “இது காதலும் நகைச்சுவையும் நிரம்பிய ஒரு கதை. முழுக்க முழுக்க ஃபீல்-குட் அனுபவத்தை வழங்கும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லை என்ற ஏக்கம் ரசிகர்களிடையே உள்ளது. அந்த இடைவெளியை நிரப்பும் படமாக இது அமையும்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இது ஜோடி பொருத்தத்தை மையமாகக் கொண்ட படம். நாயகிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. திறமையான நடிகையான அன்னா பென்னுடன் பணியாற்றியதில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவும் இணை எழுத்தும் பிரவீன் பாலு மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ராம் பாண்டியன் கவனிக்கிறார். இருவரும் ‘நாய் சேகர்’ படத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கலகலப்பான பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். கலை இயக்கம் – ஶ்ரீ சசிகுமார், ஆடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு – எஸ்.என். அஸ்ரப் / நரேஷ் தினகரன்.

கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிப்பில், கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Director Lokesh Kanagaraj has released the first look poster of Koyambathoor Maappillai.

 

India’s leading media production and talent management company, , has ventured into film production with its maiden project titled Coimbatore Mappillaii.

With the shooting successfully wrapped up, the film’s first look was unveiled on the occasion of Valentine’s Day by filmmaker Lokesh Kanagaraj, a proud son of Coimbatore. He appreciated the team and extended his best wishes for the film’s success.

Produced by Karthik Srinivas and Mahaveer Ashok under the Noise and Grains banner, the film is written and directed by Kishore Rajkumar, who also plays the lead role. Kishore had earlier directed the film .

Coimbatore Mappillaii is a vibrant romantic-comedy designed as a complete family entertainer, packed with humour from start to finish. An announcement regarding the film’s music release will be made soon.

The female lead is played by acclaimed Malayalam actress , who also starred in the Tamil film . Several prominent actors will be seen in pivotal roles.

Speaking about the film, Kishore Rajkumar said, “This is a story filled with romance and humour. The screenplay is crafted to offer a wholesome feel-good experience. There is a longing among audiences for films like those directed by sir. This film aims to fill that gap.”

He further added, “The film revolves around compatibility in relationships and gives strong importance to the female lead. I am delighted to have worked with the immensely talented Anna Ben and thank Noise and Grains for this opportunity.”

Cinematography and co-writing are handled by Praveen Balu, while editing is by Ram Pandian, both of whom previously collaborated with Kishore Rajkumar on Naai Sekar. A lively song in the film has been choreographed by Brindha Master. Art direction is by Sri Sasikumar, costume design by Kiruthikha Sekar, and executive production by S.N. Asraf / Naresh Dinakaran.

Coimbatore Mappillaii is gearing up for a theatrical release soon.