Sunday, May 19
Shadow

மாநாடு திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகியுள்ள மாநாடு திரைவிமர்சனத்தை இங்கே காணலாம்.
ஒரு மாநாடு கூட்டத்தில் முதலமைச்சர் கொள்வதற்கான சதி நடக்கிறது. இந்த சதி வழக்கில் எதிர்பாராத விதமாகச் சிம்பு இழுத்து வரப்படுகிறார். பின்னர் அவர் இதனை எப்படிச் சமாளிக்கிறார் அடுத்து என்ன நடக்கிறது? என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம்.
நடிகர் சிம்பு வழக்கம்போல திறமையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.
சிம்புவை போலவே கச்சிதமான நடிப்பால் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்துள்ளார் எஸ் ஜே சூர்யா.
அவர் மட்டுமல்லாமல் நாயகியாக நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன், ‌‌ மற்றும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள எஸ் ஏ சந்திரசேகர் எனப் பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. ‌‌ பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் வகையில் உள்ளது.
ரிச்சர்ட் எம் நாதன் படத்தினை அழகாகப் படமாக்கி காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளார்.
பிரவீன் கே எல் அவர்களின் எடிட்டிங் கனகச்சிதம்.
தன்னுடைய இயக்கத்தில் இதுவரை வெளியான படங்களைக் காட்டிலும் இந்த படத்தில் அதிக கவனத்தைச் செலுத்தி அதற்கு ஏற்றார்போல நடிகர்களிடம் வேலை வாங்கி பக்கா ஆக்ஷன் என்டர்டெயினர் திரைப்படமாக மாநாடு படத்தை இயக்கியுள்ளார்.
படத்தின் பிளஸ்: 
விறுவிறுப்பான திரைக்கதை, சிம்பு, எஸ் ஜே சூர்யா ஆகியோரின் நடிப்பு
மொத்தத்தில் மாநாடு சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து சினிமா ரசிகர்களையும் கவரும் .