இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள மாறன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
தனுஷின் தந்தையாக வரும் ராம்கி நேர்மையான பத்திரிகையாளராக இருந்து வருகிறார் பள்ளியில் நடக்கும் ஊழல் பற்றி உண்மையை கண்டுபிடித்து எழுதியதால் பின்னர் அவர் ரவுடிகளால் கொல்லப்படுகிறார் எழுதியதால் சமயத்தில் அவரது மனைவியும் பிரசவத்தின்போது உயிரிழக்கிறார் தாய் தந்தையை இழந்த தனுஷ் தன்னுடைய தங்கையை வளர்த்து ஆளாக்கினார் மேலும் தன்னுடைய தந்தையைப் போலவே அவரும் ஒரு நேர்மையான பத்திரிக்கையாளராக உருவெடுக்கிறார்.
படத்தின் ஆரம்பத்திலேயே பாரில் ரவுடிகளுடன் போதையில் சண்டை போட்டு போலீசிடம் சிக்கி பின்னர் மாளவிகா வந்து மீட்டுச் செல்கிறார். அப்படியே பிளாஷ்பேக் துவங்குகிறது அப்பாவைப்போல எதை அப்படியே அதை ஆராய்ந்து அதில் இருக்கும் உண்மையை தான் எழுதுகிறார் தனுஷ். பின்னர் தனுஷின் நண்பரான போலீஸ் அதிகாரி ஒருவர் அரசியல்வாதியான சமுத்திரக்கனி வாக்கு எந்திரத்தில் வாக்கு வாக்குப்பதிவில் செய்த முறைகேட்டை கண்டு பிடிக்கச் சென்ற போலீஸ் அதிகாரி காணவில்லை என்பதால் தனுஷின் உதவியாய் நாடுகிறார்.
மேலும் இந்த வழக்கில் உண்மை என்ன என்பதை கண்டுபடிக்க தனக்கு உதவி செய்யுமாறு கேட்கிறார். இதனால் தனுஷ் ஒப்புக்கொள்கிறார். பின்னர் சமுத்திரகனி அதிகாரத்திற்கு வர வாக்கு பின்னர் செய்யும் ஊழல்களை கண்டுபிடிக்கிறார் தனுஷ். இதனால் தனுஷ் வாழ்விலும் அவரது தந்தை ராம்கி போல பிரச்சினை ஏற்படுகிறது. இறுதியில் தனுஷ் அந்த பிரச்சினைகளிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தின் பிளஸ்:
தனுஷ் நடிப்பு, ட்விஸ்ட்டுகளை கடைசி வரை கொண்டு சென்றது இயக்குனரின் சாமர்த்தியம். குறைவான பாடல்கள்
படத்தின் மைன்ஸ்:
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.
மொத்தத்தில் சரியான ஆக்ஷன் சஸ்பென்ஸ் படமாக மாறன் அமைந்திருக்கிறது.