Monday, May 20
Shadow

மாயோன் திரை விமரசனம் (ரேட்டிங் 3/5)

இயக்குனர் கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தான்யா ரவிசந்திரன் நடிப்பில் வெளியாகியுள்ள மாயோன் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

மாயோன் மலை என்ற பகுதியில் உள்ள பழங்கால கிருஷ்ணர் கோயிலை இந்திய தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வுக்கு தொல்லியல் துறை அதிகாரியான கேஎஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். ஆனால், அவரது கீழ் வேலை பார்க்கும் ஹரிஷ் பெரடி, சிபிராஜ் இருவரும் சேர்ந்து அந்தக் கோயிலில் இருக்கும் ரகசிய அறையில் உள்ள புதையலை எடுத்து வெளிநாட்டிற்குக் கடத்த நினைக்கிறார்கள். அந்த புதையல் அறை எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் முயற்சி செய்கிறார்கள். திட்டமிட்டபடி அவர்களால் அதைச் செய்ய முடிந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

தொல்லியல் துறையில் ஆராய்ச்சியாளராக சிபிராஜ். எந்த ஒரு பழங்காலப் பொருளையும் அதைப் பார்த்ததுமே அது பற்றிய விவரங்களை சொல்லும் திறமை படைத்தவர். அப்படிப்பட்டவர் கோயில் புதையலைக் கண்டுபிடிப்பதும், அதைக் கடத்துவதுமான செயலில் ஈடுபடுகிறார் என்பதை நம்ப முடியவில்லை. கடைசியில் அவரது கதாபாத்திரத்தில் இயக்குனர் வைத்துள்ள ட்விஸ்ட் எதிர்பாராத ஒன்று. தன் கதாபாத்திரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சிபிராஜ்
நடித்திருக்கிறார்.

படத்தின் பிளஸ்:
இளையராஜாவின் இசை, கலை இயக்குனரின் திறமை

படத்தின் மைன்ஸ்:
கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டது.

மொத்தத்தில் மாயோன் திரைபடத்தை ஒரு முறை பார்க்கலாம்.