Thursday, June 24
Shadow

மண்டேலா – திரைவிமர்சனம் (திருப்புமுனை) Rank 4.5/5

தமிழ் சினிமாவில் அழுத்தமான கதை சரியான நேரங்களில் அதாவது கால சூழ்நிலைக்கு ஏற்ப வெளியாகும் அப்படி ஒரு படம் யோகிபாபுவின் மண்டேலா. இன்று தேர்தல் காலத்தில் பல வாக்குறுதிகளை நாம் சந்தித்து வருகிறோம் அதேபோல நம் ஓட்டின் அருமையை பலருக்கு தெரியாமல் இருக்கிறார்கள் . நம் ஓட்டின் மதிப்பை சொல்லும் பாடம் தான் இந்த மண்டேலா மிகவும் வலுவான கதை யோகிபாபு தலை மேல் இயக்குனர் தூக்கிவைத்துள்ளர் அதை உணர்ந்து கதாபாத்திரமாக வாழ்ந்துதிருகிறார் யோகிபாபு.

ஒரு ஓட்டு என்ன செய்துவிடும் ஒரு ஓட்டுக்காக அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் என்பதை அற்புதமாக சொல்லியுள்ளது மண்டேலா திரைப்படம். புதுமுக இயக்குனர் அஸ்வின் இயக்கியுள்ள மண்டேலா திரைப்படம். சூரங்குடி ஊராட்சியில் வடக்கூர் தெர்கூர் என இரண்டு ஊரைச்சேர்ந்தவர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.

இரு ஊரைச்சேர்ந்தவர்களுக்கும் எப்போதுமே ஆகாது. சாதாரண கழிப்பறை கட்டுவதிலேயே பிரச்னை வந்து சண்டையில் போய் முடிகிறது. இந்த நிலையில் ஊராட்சி தேர்தல் வருகிறது. இரு ஊரைச் சேர்ந்த இரண்டு பெரிய கைகள் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். யோகிபாபு அந்த ஊரில் சவரத்தொழில் செய்துவருகிறார். இறுதியில் யார் வெற்றிபெற்றார்கள் யோகிபாபுவுக்கும் இந்த தேர்தலுக்கும் என்ன தொடர்பு என்பதை நகைச்சுவையாகவும் அருமையாகவும் சொல்லியுள்ளார் இயக்குனர். யோகிபாபு ஸ்மைல் என்ற கதாபாத்திரத்தில் தனது வழக்கமான காமெடியையும் தாண்டி குணச்சித்திரமாகவும் நடித்து கலக்கியுள்ளார். கூடவே வரும் கிருதா என்ற குட்டிப்பையனும் தபால் அதிகாரியாக வரும் ஷீலா ராஜ்குமார் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்துள்ளார்.


மேலும் ஊர்க்காரர்கள் முதல் முக்கிய பாத்திரங்கள் வரை ஒவ்வொருவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளனர். இது தேர்தல் சமயம் சரியான நேரத்திற்கு இப்படம் வந்துள்ளது. ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பதை அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு பயன்படுத்திக்கொள்கின்றனர் அதனால் எவ்வளவு பெரிய ஆபத்து வரும் என்பதை ஒரு ஊராட்சி தேர்தலை வைத்தே நெத்தியடியாக சொல்லியுள்ளார் இயக்குனர். விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. பரத் சங்கரின் பாடல்களும் பின்னணி இசையும் அருமை. கலை இயக்குனர் எடிட்டர் என இப்படத்திற்கு உழைத்தவர்கள் அனைவரும் தங்களுடைய முழு ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். ஒரு ஓட்டால் என்ன செய்துவிட முடியும் நாமல்லாம் ஓட்டு போடாமல் விட்டால் என்ன மாறிவிடப்போகிறது என நினைக்கும் ஒவ்வொரு வாக்காளனும் இந்த படத்தை பார்க்க வேண்டும். தமிழ் சினிமாவின் அற்புதம் இந்த மண்டேலா.

CLOSE
CLOSE