Thursday, January 16
Shadow

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் நாடு திரைப்படம்

 

ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் நாடு திரைப்படம்

ஶ்ரீ ஆர்ச் மீடியா சார்பில் சக்கரா மற்றும் ராஜ் தயாரிப்பில் எம் சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் நாடு,

மலைவாழ் மக்களின் வாழ்வையும் அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்கும் கூட எப்படிப்பட்ட சிரமங்களை அனுபவிக்கிறார்கள் என்ற எதார்த்தத்தையும் மிக அழகாக சொல்லி இருக்கும் படம் தான் நாடு..

இதில் கதாநாயகனாக பிக் பாஸ் புகழ் தர்ஷன் நடிக்க,
கதாநாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சிங்கம் புலி,RS சிவாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர்…

இப்படம் முழுக்க முழுக்க கொல்லிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது..

இப்படத்திற்கு இசை சத்யா, ஒளிப்பதிவு சக்தி,
கலை இயக்கம் இளையராஜா, படத்தொகுப்பு PK..

இப்படத்திற்கு கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குனர் சரவணன்…