
ஆன்மிக யாத்திரையாக மாறிய ‘நாகபந்தம்’ புரமோஷன்!
ஹைதராபாத் நகரம் சமீபத்தில் ஒரு வித்தியாசமான நிகழ்வுக்கு சாட்சியாக இருந்தது. பொதுவாக திரைப்பட விளம்பரங்கள் இசை வெளியீடு, டிரெய்லர் வெளியீடு அல்லது ரசிகர் சந்திப்புகளாக நடைபெறும் நிலையில், ‘நாகபந்தம்’ படக்குழு ஆன்மிகத்தையும் பாரம்பரியத்தையும் மையமாகக் கொண்டு தனது புரமோஷன் பயணத்தை தொடங்கியுள்ளது.
இயக்குநர் அபிஷேக் நாமாவின் கனவுத் திட்டமாக உருவாகியுள்ள ‘நாகபந்தம்’ திரைப்படம், ஜூலை 3ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. NIK ஸ்டூடியோஸ் மற்றும் அபிஷேக் பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி தயாரித்துள்ள இப்படத்தின் விளம்பர நடவடிக்கைகள், அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டன.
கனமழையையும் மீறி ஆயிரக்கணக்கானோர் திரண்ட இந்த நிகழ்வு, ஒரு திரைப்பட விளம்பர நிகழ்வை விட பக்தி மற்றும் கலாசார விழாவாகவே காட்சியளித்தது. குறிப்பாக, அனந்த பத்மநாப சுவாமியின் பிரம்மாண்ட சிலை திறந்து வைக்கப்பட்ட தருணம் நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது. அந்த ஆன்மிகச் சூழல் நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை வழங்கியது.
நிகழ்வில் பேசிய நாயகன் விராட் கர்ணா, “இரண்டு ஆண்டுகளாக எங்கள் முழுக்குழுவும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளது. இன்று இந்த ரதயாத்திரைக்கு மக்கள் அளித்துள்ள அன்பும் ஆதரவும், ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளிலும் தொடரும் என நம்புகிறேன். இந்த யாத்திரை பல நகரங்களுக்கு செல்லவுள்ளது. மக்கள் எங்கள் படத்தை தங்களுடைய படமாக ஏற்றுக்கொண்டு வெற்றியடையச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
இயக்குநர் அபிஷேக் நாமா தனது உரையில், “இது ஒரு திரைப்படத்தின் புரமோஷன் மட்டுமல்ல. நமது பாரம்பரியம், கலாசாரம் மற்றும் ஆன்மிக வேர்களை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முயற்சி. அடுத்த தலைமுறையினருக்கும் இந்த மரபுகளின் முக்கியத்துவத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இந்த முயற்சிக்கு அனைவரின் ஆசீர்வாதமும் ஆதரவும் தேவை,” என்று தெரிவித்தார்.
மேலும், படத்தின் தயாரிப்பாளர்கள் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டியின் தைரியமான ஆதரவை பாராட்டிய அவர், “இவ்வளவு பெரிய கனவை நனவாக்க அவர்கள் அளித்த ஒத்துழைப்பு அளவிட முடியாதது. அதேபோல், விராட் கர்ணா தனது உடல்நலச் சவால்களையும் பொருட்படுத்தாமல் முழுமையான அர்ப்பணிப்புடன் நடித்துள்ளார். படம் வெளியாகும் போது அவரது திறமையை ரசிகர்கள் புதிய கோணத்தில் காண்பார்கள்,” என்றார்.
திரைப்பட விளம்பரத்திற்கான வழக்கமான எல்லைகளைத் தாண்டி, ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தை முன்னிறுத்திய இந்த முயற்சி, ‘நாகபந்தம்’ படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. ஜூலை 3ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த திரைப்படம், திரையரங்குகளில் எந்த அளவிற்கு மாபெரும் வரவேற்பைப் பெறப்போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Nagabandham’ Promotion Turns into a Spiritual Journey!
Hyderabad recently witnessed a truly unique event. While film promotions are usually centered around audio launches, trailer releases, or fan interactions, the team of Nagabandham has chosen a different path by blending spirituality, culture, and tradition into its promotional campaign.
Director Abhishek Nama’s ambitious dream project Nagabandham is all set for a grand worldwide theatrical release on July 3. Produced by Kishore Annapureddy and Nishitha Nagireddy under the banners of NIK Studios and Abhishek Pictures, the film’s promotional journey commenced with the launch of the Anantha Padmanabha Swamy Ratha Yatra in Hyderabad.
Despite heavy rains, thousands gathered to witness the event, which felt more like a cultural and spiritual celebration than a conventional movie promotion. One of the major highlights was the unveiling of a grand idol of Lord Anantha Padmanabha Swamy, creating a deeply devotional atmosphere and offering attendees a memorable spiritual experience.
Speaking at the event, lead actor Virat Karrna expressed his gratitude and said, “Our entire team has worked with complete dedication on this film for the last two years. The love and support shown by people for this Ratha Yatra give us confidence that the same blessings will continue when the film releases on July 3. As part of this journey, we will travel to several cities, and I believe audiences will embrace the film and make it a grand success.”
Director Abhishek Nama emphasized that the initiative goes far beyond film promotion. “This is not just about promoting a movie. It is an effort to reconnect people with our cultural heritage, traditions, and spiritual roots. We also hope to pass these values on to future generations. We seek everyone’s blessings and support for this meaningful initiative,” he said.
He also acknowledged the unwavering support of producers Kishore Annapureddy and Nishitha Nagireddy, stating, “Their courage and belief made it possible to transform this grand vision into reality. Virat Karrna, too, pushed himself beyond limits during the making of this film, working with remarkable commitment despite health challenges. Audiences will witness a completely new side of his talent when the film releases.”
By stepping beyond the conventional boundaries of movie marketing and embracing spirituality and cultural heritage, the Nagabandham team has created a distinctive identity for its promotional campaign. With anticipation steadily growing, audiences are eagerly waiting to see the magic unfold when the film arrives in theatres worldwide on July 3.
