
சினிமாவை பொறுத்தவரை உலகத்தில் எத்தனை விருதுகள் கொடுத்தாலும் நம் சினிமாகாரனுக்கு தேசிய விருது கிடைத்தால் தான் சந்தோசம் அது மட்டும் இல்லை உலகத்தையே கையில் பிடித்த சந்தோசம் தன் பிறவி பலன் மட்டும் இல்லாமல் சினிமாவுக்கு வந்த நோக்கம் நிறைவேறிவிட்டது. போல ஒரு சந்தோசம் ஆனால் இந்த தேசிய விருதுகளில் பல உல் அடி வைத்து தான் கொடுகிறார்கள். தேசியவிருது மட்டும் இல்லை பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ விருதும் பல முறை இல்லை எப்பவும் ஆளும் கட்சிக்கு தெரிந்தவர்களுக்கு தான் கிடைக்கிறது.
இதை நான் சொல்லவில்லை ஒரு மேடையில் மறைந்த பத்திரிக்கையாளர் மற்றும் மூத்த நடிகறான் சோ கூறியது இந்த பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளால் ஒரு நன்மையையும் இல்லை இதற்கு நம்ம ஆட்கள் ஏன் அடித்துகொள்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அதே போல தான் தேசிய விருதும் ஜூரியில் தெரிந்தவர்கள் இருந்தால் மிக சுலபமாக கிடைக்கும் என்று பலர் காதுபட பெசிகொல்ல்கிரார்கள் ஆனால் இதை பகிரங்கமாக பேச பலருக்கு தயக்கம் ,இதை இப்ப நம்ம இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மிகவும் பகிரங்கமாக பேசியுள்ளார்.
64வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. அதில் தமிழில் ‘ஜோக்கர்’, சூர்யாவின் ‘24’, ‘தர்மதுரை’ போன்ற படங்களுக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் ‘ஜோக்கர்’ படத்திற்கு கிடைத்ததை உண்மையான விருது என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் சூர்யாவின் ‘24’ படத்தின் ஒளிப்பதிவிற்கு தேசிய விருது கொடுத்தது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. ஏனெனில் ஒளிப்பதிவாளர் திரு அந்தப் படம் முழுவதும் ஒளிப்பதிவு செய்யவில்லை. கிரண் டியோஹான்ஸ் என்பவர்தான் ஒளிப்பதிவு செய்தார்.
இந்நிலையில் இயக்குனர் முருகதாஸ் ‘’தேசிய விருதுகள் பாரபட்சமான முறையில் சிபாரிசுகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது’’ என்று முதல் ஆளாகக் குரல் கொடுத்துள்ளார். மனதிற்குள்ளேயே பலர் புழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தைரியமாக தன் கருத்தை முன் வைத்ததால் முருகதாசஸுக்கு ஃபோன் செய்து பல பிரபலங்கள் பாராட்டி வருகிறார்கள்.
